உள்துறை, தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக்கான துணையமைச்சர் முகமது ஃபைஷால் இப்ராஹிம், மரீன் பரேட்- பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் பாேட்டியிடவுள்ள மக்கள் செயல் கட்சி அணியில் சேரவிருக்கிறார்.
அங்குள்ள கெம்பங்கான் பகுதியில் இணைப் பேராசிரியர் ஃபைஷால் இப்ராஹிம் வேட்பாளராக போட்டியிடுவார் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
மரின் பரேட் குழுத்தொகுதியின் வேட்பாளர் அணித் தலைவராக உள்ள டாக்டர் டான், சனிக்கிழமையன்று (ஏப்ரல் 12) செய்தியளார்களிடம் இதனைத் தெரிவித்தார்.
அப்போது நடந்துகொண்டிருந்த உணவு நிகழ்ச்சியில் டாக்டர் டான், ஜூ சியட் வட்டாரத்திலுள்ள தனியார் குடியிருப்புப் பேட்டையின் புதுப்பிப்பு குறித்து பேசினார்.
கெம்பாங்காங் - சை சீ பகுதி, மரின் பரேட் குழுத்தொகுதியைச் சேர்ந்தது. முன்னாள் நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் அந்தக் குழுத்தொகுதியை முன்னதாக வழிநடத்தினார்.
ஆக அண்மைய தொகுதி எல்லைகள் வரையறைகளின்படி, சை சீ பகுதியில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புகள், ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் சேர்க்கப்படும்.
அப்போதைய தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுவியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பினால் திரு டான் ஜூலை 2023ல் பதவி விலகினார்.
மரின் பரேட் குழுத்தொகுதியில் சேரும்படி பிரதமர் லாரன்ஸ் வோங் தம்மிடம் கேட்டிருந்ததாகவும் அதற்குத் தாம் இசைந்ததாக இணைப் பேராசிரியர் ஃபைஷால், கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“பேராசிரியர் ஃபைஷால் மீண்டும் மரின் பரேட் திரும்புவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நாங்கள் அவரை வரவேற்கிறோம்,” என்று டாக்டர் டான், ஏப்ரல் 12ம் தேதி யூனோஸ் தொகுதி நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

