கரையோரப் பூந்தோட்டத்தில் கொல்லப்படும் பறவைகள்; விசாரிக்கும் அதிகாரிகள்

கரையோரப் பூந்தோட்டத்தில் கொல்லப்படும் பறவைகள்; விசாரிக்கும் அதிகாரிகள்

1 mins read
00c83de9-d3f7-45a6-87ef-4da4ea31a2ae
கரையோரப் பூந்தோட்டத்தின் எல்லைக்குள் கொல்லப்பட்ட பறவைகள். - படம்: ஏக்கர்ஸ்

கடந்த சில மாதங்களாகவே கரையோரப் பூந்தோட்டத்தின் எல்லைக்குள் பறவைகள் கொல்லப்பட்டு வருகின்றன. 

பறவைகள் கொல்லப்படுவது குறித்து ‘ஏக்கர்ஸ்’ எனும் விலங்கு நல ஆய்வு, கல்வி சமுதாய அமைப்பு அக்டோபர் 18ஆம் தேதி ஃபேஸ்புக் வழியாக கவலை தெரிவித்தது. 

இரண்டு மாதங்களில் 4 பறவைகள் கொல்லப்பட்டுள்ளன. மரத்தில் பசையை ஒட்டிவைத்ததால் பறவைகள் அதில் சிக்கி இறந்தன, என அது குறிப்பிட்டது. 

அதைத் தொடர்ந்து கரையோரப் பூந்தோட்டத்தின் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.  

குறிப்புச் சொற்கள்