தனது 11 வயது இரட்டை மகன்களைக் கொன்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள தந்தையின் மீதான கொலை குற்றச்சாட்டுகள் இப்போது குறைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற ஆவணங்களில் சேவியர் யாப் என்னும் அந்த 49 வயது ஆடவர் அப்பர் புக்கிட் தீமாவுக்கு அருகேயுள்ள கிரீன்ரிட்ஜ் கிரெசன்ட் பூங்காவில் தனது மகன்களைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது.
ஆடவர் மீது தற்போது மரணத்தை விளைவித்ததாகப் புதிய குற்றச்சாட்டு குறிப்பிடுகிறது.
ஆடவர் மீது இதற்கு முன்னர் கொலைக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆடவரின் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மாண்ட இரு சிறுவர்களும் மனநலக் குறையுள்ள குழந்தைகள் என்று நம்பப்படுகிறது.
வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது.

