கிளமெண்டியில் ஒருவரை கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் 50 வயது ஆடவர் மீது அக்டோபர் 23ஆம் தேதியன்று கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிற்பகல் 12.20 மணி அளவில் டோ சீ ஹோங் காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
41 வயது திரு வின்சன் கூ சின் வாவை அவர் புளோக் 311B கிளமெண்டி அவென்யூ 4ல் கொன்றதாக நம்பப்படுகிறது.
ஆனால் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து நீதிமன்ற ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை.
டோவை ஒரு வாரத்துக்கு விசாரணைக் காவலில் வைத்திருக்க அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு அவரை அழைத்துச் செல்லவும் கூடுதல் ஆதாரங்களைத் திரட்டவும் நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கு அக்டோபர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மரணம் அடைந்த திரு கூ, ஓர் அடித்தள அமைப்புத் தொண்டூழியர் என்று அக்டோபர் 22ஆம் தேதியன்று மக்கள் கழகம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
அவரது மரணம் குறித்து அது வருத்தம் தெரிவித்தது.