மைஸ்கில்ஸ்ஃபியூச்சர் இணையவாயில் மாற்றியமைக்கப்படும்

மைஸ்கில்ஸ்ஃபியூச்சர் இணையவாயில் மாற்றியமைக்கப்படும்

1 mins read
03086f22-b918-4fb1-b3d3-b44dc637448b
புதிய மேம்பாடுகளுடன் மைஸ்கில்ஸ்ஃபியூச்சர் இணையவாயில் மாற்றியமைக்கப்படும். - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு இரு பெரிய மேம்பாடுகளுடன் மைஸ்கில்ஸ்ஃபியூச்சர் இணையவாயிலை மாற்றியமைக்கவுள்ளதாக கல்விக்கான மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு போன்ற அதிக தேவையுள்ள திறன்களுக்கான பிரத்தியேகப் பரிந்துரைகள், தொழில் சார்ந்த பாடப்பிரிவுத் தேடல் கருவிகள், தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுக்கான செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ‘சாட்பாட்’ ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய பாடப்பிரிவுத் தேடல் அனுபவம் அறிமுகப்படுத்தப்படும்.

திறன் மேம்பாட்டு வாய்ப்புகளைத் தொடர்ந்து விரிவுபடுத்துகையில், கற்பவர்கள் தங்களுக்கு உள்ள விருப்பத்தெரிவுகளை எளிதாகக் கண்டறியவும் தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும் சிறந்த முறையில் ஆதரவளிக்க விரும்புவதாக செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கல்வி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது பேசிய திரு ஜனில் கூறினார்.

பாடப்பிரிவுப் பதிவுச் செயல்முறையையும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு மேம்படுத்தவுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி வழங்குநர்களுடன் தொடங்கி, தனிமனிதர்கள் தனியாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க பயிற்சி வழங்குநரின் இணையத்தளத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, முன்பே நிரப்பப்பட்ட சிங்பாஸ் தகவல்களைப் பயன்படுத்தி மைஸ்கில்ஸ்ஃபியூச்சரில் நேரடியாகப் பாடப்பிரிவுகளுக்குப் பதிவுசெய்ய முடியும்.

இந்த மாற்றங்கள் ஒருவர் தமது தொழில்முறை இலக்குகளுக்கு ஏற்ற பாடப்பிரிவுகளை எளிதாகக் கண்டறிய உதவுவதோடு தகவல் இடைவெளியையும் குறைக்கும் என்று திரு ஜனில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்