தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹவ்காங்கில் காவல்துறையினர் மூவரைத் தாக்கிய நிர்வாண ஆடவர் கைது

1 mins read
a465f29a-05fa-482f-8c9d-726dad738fc1
ஆடவர் ஒருவர் ஆடையேதுமின்றிச் சாலையில் ஓடுவதாகக் காவல்துறைக்கு வியாழக்கிழமையன்று பிற்பகல் 1.10 மணிவாக்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.  - படம்: சாவ்பாவ்

ஹவ்காங்கில் ஆடவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் 22 வயது ஆடவர் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 17) கைது செய்யப்பட்டார்.

ஹவ்காங் அவென்யூ 8ல் அச்சம்பவம் நடந்தது. தாக்குதலில் ஈடுபட்டவரைக் காவல்துறையினர் கைதுசெய்ய முற்பட்டபோது அவர்களையும் கூர்மையான ஆணிகள் கொண்ட மரப்பலகையைக் கொண்டு அவர் தாக்கினார்.

அத்தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் மூவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன.

ஆடவர் ஒருவர் நிர்வாணமாகச் சாலையில் ஓடுவதாகக் காவல்துறைக்கு சம்பவத்தன்று பிற்பகல் 1.10 மணிவாக்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினரிடம் உதவி வேண்டி அழைப்பு வருவதற்கு முன்பே அந்த ஆடவர் 30 வயது மதிக்கத்தக்க மற்றோர் ஆடவரைத் தாக்கியதாகக் கூறப்பட்டது.

புளோக் 681 ஹவ்காங் அவென்யூ 8ல் இருந்து உதவி தேவைப்படுவதாகத் தங்களுக்குச் சம்பவத்தன்று பிற்பகல் 1.30 மணிக்கு அழைப்பு வந்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

வேண்டுமென்றே ஒருவருக்குக் காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் அரசாங்க ஊழியர்களை அவர்களின் கடமைகளைச் செய்ய விடாமல் தடுப்பதற்காக வேண்டுமென்றே அவர்களுக்குக் காயம் விளைவித்த குற்றத்திற்காகவும் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்