அரசியல் சார்ந்த முக்கிய நபர்கள் பட்டியலில் செல்வந்தர் ராபர்ட் இங் பெயர்

1 mins read
aaac0c28-93e9-4e6d-ac28-c12fa895aaf1
அரசியல் சார்ந்த முக்கிய நபர்கள் பட்டியலில் 70 வயது ராபர்ட் இங் மற்றும் அவரது மகன் டேரியல் இங் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. - படம்: புளூம்பர்க்

சிங்கப்பூர் செல்வந்தர் ராபர்ட் இங்கும் அவரது மூன்று பிள்ளைகளின் பெயர்களும் அரசியல் சார்ந்த முக்கிய நபர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஃபிக்கா என்று அழைக்கப்படும் வெளிநாட்டுத் தலையீடு (எதிர்நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் அவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பட்டியலில் உள்ள நான்கு நபர்களும் சீனாவின் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் மூத்த உறுப்பினர்களாக உள்ளனர். அதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

72 வயதான திரு ராபர்ட் இங் சொத்துச் சந்தை ஜாம்பவான். அவர் Sino Group நிறுவனத்தின் தலைவர். சிங்கப்பூரின் Far East Organization சொத்து நிறுவனமும் திரு ராபர்ட் கீழ் செயல்படுகிறது.

திரு ராபர்ட்டின் இரண்டு மகன்கள் டேரியல் இங், டேவிட் இங், மகள் நிக்கி இங் ஆகியோர் வெளிநாடு, அரசியல் சார்ந்த தகவல் வெளியீடுகளுக்கான பதிப்பில் தாங்கள் வெளிநாட்டு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களாக இருப்பதாக உறுதி செய்துள்ளனர் என்று உள்துறை அமைச்சு திங்கட்கிழமை (ஏப்ரல் 7) தெரிவித்தது.

ஃபிக்கா சட்டத்தின்படி சிங்கப்பூரர்கள் வெளிநாட்டு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களாக இருந்தால் அது குறித்து கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்