தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடும்பப் பிணைப்பை வலுப்படுத்திய ‘நம்ம குடும்பம்’

2 mins read
b27fb48c-5bf3-445f-a8a4-f34da8a11f88
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ். - படம்: மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு

குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தவும் எஸ்ஜி60 கொண்டாட்டத்தைப் பிரதிபலிக்கவும் மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு அண்மையில் ‘நம்ம குடும்பம்’ எனும் இரவு உணவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

‘சிங்கப்பூர் சிவிலியன்ஸ்’ சங்கம், மீடியாகார்ப் செய்தியுடன் கைகோத்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

சமூக ஒற்றுமையைப் பறைசாற்றியது மட்டுமின்றி இந்த நிகழ்ச்சி தலைமுறைகளுக்கு இடையிலான பிணைப்பை அதிகரிக்கும் முயற்சியிலும் இறங்கியது.

கிட்டத்தட்ட 400 குடும்ப உறுப்பினர்கள் சனிக்கிழமை (ஜூலை 12) அவர்களின் கதைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

கிட்டத்தட்ட 400 குடும்ப உறுப்பினர்கள் சனிக்கிழமை (12 ஜூலை) அவர்களின் கதைகளைப் பகிர்ந்துகொண்டனர்.
கிட்டத்தட்ட 400 குடும்ப உறுப்பினர்கள் சனிக்கிழமை (12 ஜூலை) அவர்களின் கதைகளைப் பகிர்ந்துகொண்டனர். - படம்: மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு

கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தமது மனைவியுடன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

‘த செவ்ரோன்ஸ்’ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆடல், பாடல் அங்கங்கள் இடம்பெற்றன. புகழ்பெற்ற உள்ளூர்ப் பாடகரும், இசையமைப்பாளருமான ஷபீரின் அங்கமும் இடம்பெற்றது.

“குடும்பம் நமது சமூகத்திற்கு ஓர் அடித்தளம் போன்றது. இந்த இணைப்புகளும், கலாசாரக் கூறுகளும் தலைமுறைகளுக்கிடையே செழிக்க செய்தி ஒரு பாலமாக விளங்குகிறது,” என்று கூறினார் மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவுத் தலைவர் ந. குணாளன்.

“இந்த நிகழ்ச்சி குடும்பங்களின் முக்கியத்துவத்தை நன்கு வெளிக்காட்டுகிறது. குடும்பங்கள் வலுவாக இருந்தால் சமுதாயமும் வலுவாக இருக்கும்,” என்றார் துணை அமைச்சர் தினேஷ் வாசு.

தன் சகோதரியுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இல்லத்தரசி நாகரத்னம், 70, இதன் மூலம் சகோதரியுடன் இனிமையாக நேரத்தைச் செலவிட முடிந்ததாகக் கூறினார்.

“முதல்முறையாக இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளேன். மூத்தோருக்கு அப்பாற்பட்டு, இளையர்களையும் மகிழ்விக்கும் வண்ணம் நிகழ்ச்சி இருந்தது. குடும்பங்களை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது மிகச் சிறப்பு,” என்றார் நவீன்.

‘த செவ்ரோன்ஸ்’ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆடல், பாடல் அங்கங்கள் இடம்பெற்றன.
‘த செவ்ரோன்ஸ்’ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆடல், பாடல் அங்கங்கள் இடம்பெற்றன. - படம்: மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு
குறிப்புச் சொற்கள்