கர்ப்பக்கால நீரிழிவுநோய் இல்லாத கர்ப்பிணிகளைக் காட்டிலும் கர்ப்பக்கால நீரிழிவுநோய் உள்ள கர்ப்பிணிகளின் கடைசி மூன்று மாத மருத்துவமனைக் கட்டணம் குறைவாக இருப்பது உள்ளூர் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கர்ப்பக்கால நீரிழிவுநோய் இல்லாத கர்ப்பிணிகளின் கடைசி மூன்று மாத மருத்துவமனைக் கட்டணம் சராசரியாக $1,300க்கும் அதிகம்.
முன்கூட்டியே கண்டுபிடிக்கப்படாத அறிகுறிகள் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.
தாய்-சேய் இணைகளை ஆய்வு செய்து அதலிருந்து பெறப்பட்ட தரவுகளை ஏஸ்டார் ஆய்வுக் குழு பகுப்பாய்வு செய்தது.
தேசிய பகுப்பாய்வுத் தளத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளையும் அது ஆராய்ந்தது.
இந்தத் தேசிய பகுப்பாய்வுத் தளம் ‘தி டிரஸ்டட் ரிசர்ச் அண்ட ரியல் வோர்ல்டு டேட்டா யுடிலைசேஷன் அண்ட் ஷேரிங் டெக்’ என்று அழைக்கப்படுகிறது.
தரவுகளில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படாமல் இருப்பதைத் தளம் உறுதி செய்தது. இதன்மூலம் பகுப்பாய்வுக் குழுவிடம் தரவுகள் சென்றடைவதற்கு முன்பே தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்பட்டன.
ஏறத்தாழ 70 திட்டங்களுக்கு இத்தளத்தை ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இத்தளம் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ கட்டமைப்புக்குள், பெயர் குறிப்பிடாத தரவுகளைப் பயன்படுத்தி விரைவாக ஆய்வு நடத்த உள்ளூர் ஆய்வாளர்களுக்கு இத்தளம் வகை செய்கிறது.
இதனால் ஆய்வு நடத்துபவர்கள் புதிய தரவுகளைச் சேகரிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் தேவை இல்லை.

