தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய தின அணிவகுப்பு 2025: மே 28 முதல் நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

2 mins read
c2802a4f-671b-45c9-91d8-e085a8d4b283
விண்ணப்பத்தில் வெற்றி பெற்றோருக்கு ஜூன் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் குறுஞ்செய்தி, மின்னஞ்சல்வழி அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படும்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய தின அணிவகுப்பு 2025க்கான நுழைவுச்சீட்டுகளுக்கு வரும் புதன்கிழமை மே 28ஆம் தேதி நண்பகல் 12 மணிமுதல் ஜூன் 9ஆம் தேதி நண்பகல் 12 மணிவரை விண்ணப்பிக்கலாம்.

சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் நுழைவுச்சீட்டுகளுக்கு தங்களது சிங்பாஸ் செயலிவழி விண்ணப்பிக்கலாம்.

முதல் முன்னோட்ட நிகழ்ச்சி (ஜூலை 26), இரண்டாவது முன்னோட்ட நிகழ்ச்சி (ஆகஸ்ட் 2), தேசிய தின அணிவகுப்பு (ஆகஸ்ட் 9) ஆகிய மூன்று நிகழ்ச்சிகளுக்கும் பொதுமக்கள் 2, 4 அல்லது 6 நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்:

தேசிய தின அணிவகுப்பு 2025ன் அதிகாரத்துவ இணையத்தளம் (www.ndp.gov.sg) வழியாக விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, சிங்பாஸ் வழியாக தகவல்களை நிரப்பலாம்.

இவ்வழியில் மட்டுமே அணிவகுப்புக்கான நுழைவுச்சீட்டு பெற விண்ணப்பம் செய்ய முடியும். சரிபார்க்கப்படாத இணையத்தளங்களை அணுகி, எந்தப் படிவங்களையும் நிரப்ப வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

விண்ணப்பத்தில் வெற்றி பெற்றோருக்கு ஜூன் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் குறுஞ்செய்தி, மின்னஞ்சல்வழி அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படும். அத்தகைய குறுஞ்செய்திகளும் மின்னஞ்சல்களும் gov.sg, info@mail.postman.gov.sg என்ற முகவரிகளிலிருந்து மட்டுமே அனுப்பப்படும்.

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நுழைவுச்சீட்டுகள் ஒதுக்கப்படாது.

மேலும், அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் கிடைக்கும் நுழைவுச்சீட்டுகள் விற்பனைக்கு அல்ல. மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு நுழைவுச்சீட்டிற்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். கைகளில் தூக்கிவரும் குழந்தைகள் உட்பட அனைத்துக் குழந்தைகளுக்கும் நுழைவுச்சீட்டுகள் தேவை.

சிங்பாஸ் இல்லாதவர்கள் இணையம், சர்விஸ்எஸ்ஜி (ServiceSG) சேவை நிலையம் வழியாக ஒரு சிங்பாஸ் கணக்கை உருவாக்கலாம். அல்லது சிங்பாஸ் வைத்திருக்கும் நம்பகமான ஒருவரின் செயலியைப் பயன்படுத்தி நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேசிய தின அணிவகுப்பு 2025 பற்றிய கூடுதல் தகவல்களுக்கு www.ndp.gov.sg இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்