சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, தேசிய தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி தீவு முழுவதும் உள்ள பொது எச்சரிக்கை அமைப்புகள் மூலம் எச்சரிக்கை ஒலியை எழுப்பும். அன்றிரவு 8.19 மணிக்கு ‘ஆல் க்ளியர்’ எனும் ஒலி ஏறத்தாழ 10 வினாடிகளுக்கு ஒலிக்கும்.
அனைத்து சிங்கப்பூரர்களையும் ஒன்றுதிரட்டி, அவர்கள் எங்கிருந்தாலும் தேசிய உறுதிமொழியை எடுத்துக்கொண்டு, தேசிய கீதத்தைப் பாடுவதற்கு அழைப்பு விடுக்கும் ‘மாஜுலா தருணத்தை’ இந்த ஒலி குறிக்கிறது.
பொதுமக்கள் இந்த ஒலியைக் கேட்டு பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ‘ஆல் க்ளியர்’ எனும் ஒலி எவ்வாறு ஒலிக்கும் என்பதை அறிய, go.gov.sg/pws என்ற இணையத்தளத்திற்குச் செல்லலாம். அங்கு பொது எச்சரிக்கை அமைப்பு குறித்த தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.

