பிரதமர் லாரன்ஸ் வோங், இவ்வாண்டுக்கான தமது தேசிய தினப் பேரணி உரையை ஆகஸ்ட் 17ஆம் தேதி அங் மோ கியோவிலுள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்திய கல்லூரியில் உரையாற்றவுள்ளார்.
பிரதமர் அலுவலகம் இந்தத் தகவலை வியாழக்கிழமையன்று (ஜூன் 19) வெளியிட்டது.
கடந்த ஆண்டின் தேசிய தினப் பேரணி உரையில் விரிவு செய்யப்பட்ட பிள்ளைப் பேற்று விடுப்பு, வேலை தேடுவோருக்குத் தற்காலிக நிதியாதரவு அளிக்கும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டம், தம்பதியர், ஒற்றையர், மூத்தோர் ஆகியோருக்கான வீடமைப்புத் திட்டங்களில் மேம்பாடு உள்ளிட்டவற்றைப் பிரதமர் வோங் அறிவித்தார்.
காலாங் அலைவ் (Kallang Alive) பெருந்திட்டம், சிங்கப்பூரின் தெற்குக் கரையில் மறுவடிவமைப்புப் பணிகள் போன்ற திட்டங்களையும் அப்போது அவர் வெளியிட்டார்.