தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்.பி.க்கள், சமூகத் தலைவர்கள் பார்வையில் தேசிய தினப் பேரணி உரை

1 mins read
7176aa9a-a60d-4001-84e6-a6ad02db1e67
திரு விக்ரம் நாயர். - படம்: அனுஷா செல்வமணி

பிரதமர் லாரன்ஸ் வோங் ஆற்றிய தேசிய தினப் பேரணி உரையைக் கேட்டதும் தமக்கு உற்சாகம் ஏற்பட்டதாகச் சொன்னார் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக்.

டாக்டர் ஹமீது ரசாக்.
டாக்டர் ஹமீது ரசாக். - படம்: அனுஷா செல்வமணி

ஒரு மருத்துவராகப் பிரதமர் வோங் தமது உரையில் மூத்தோருக்கு கைகொடுக்கும் வசதிகளைப் பற்றிக் குறிப்பிட்ட திட்டங்கள் கேட்கும்போது தமக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகச் சொன்னார் டாக்டர் ஹமீது.

மறுமேம்பாடு காணவிருக்கும் செம்பவாங் கப்பல் பட்டறை குறித்து பிரதமர் வோங் பேசியது தமக்கு மகிழ்ச்சியை அளித்ததாக சொன்னார் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான விக்ரம் நாயர்.

“பிரதமர் வோங் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பற்றிப் பேசியதும் அது எவ்வாறு இளையர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது என்பது குறித்துப் பேசியதும் எனக்குப் பிடித்திருந்தது,” என்றார் திரு விக்ரம் நாயர்.

சிங்கப்பூரின் அடுத்த அத்தியாயத்தை எழுதுவது தொடர்பான முக்கிய திட்டங்களைப் பிரதமர் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையில் முன்வைத்தது தமக்கு பிடித்திருந்ததாகச் சொன்னார் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்.

திரு அன்பரசு ராஜேந்திரன்.
திரு அன்பரசு ராஜேந்திரன். - படம்: அனுஷா செல்வமணி

சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றத்தில் தமது தாத்தா முன்னர் பணியாற்றியதாகச் சொன்ன நற்பணி பேரவை தலைவர் ரவீந்திரன் கணேசன், கிராஞ்சியில் புதிய வீடுகள் வரவிருக்கும் செய்தியைப் பிரதமர் வோங் தமது உரையில் அறிவித்ததை எண்ணி மகிழ்ந்தார்.

“என் தாத்தாவின் நினைவுகளுக்காக நான் கிராஞ்சியில் வீடு வாங்க விரும்புகிறேன்,” என்றார் திரு ரவீந்திரன்.

திரு ரவீந்திரன் கணேசன்.
திரு ரவீந்திரன் கணேசன். - படம்: அனுஷா செல்வமணி
குறிப்புச் சொற்கள்