காவல்துறை தின அணிவகுப்பில் தேசிய சேவையாளர்களுக்கு நன்றி

1 mins read
99bfda54-81d6-4068-95f9-b2c41823e3ac
காவல்துறை தின அணிவகுப்பின் அனுசரிப்பு விழாவில் உள்துறை இரண்டாம் அமைச்சர் எட்வின் டோங் பங்கேற்றார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காவல்துறை தேசிய சேவை அதன் 50வது ஆண்டு நிறைவை இவ்வாண்டு கொண்டாடுகிறது.

சுவா சூ காங்கில் உள்ள உள்துறைக் குழு பயிற்சிக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) நடந்த காவல்துறை தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் உள்துறை இரண்டாம் அமைச்சர் எட்வின் டோங் பங்கேற்றார்.

அப்போது அவர், “சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் காவல்துறை தேசிய சேவை அதிகாரிகளின் பங்கு அளப்பரியது,” என்று தெரிவித்தார்.

தற்போதுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும் முன்னாள் அதிகாரிகளுக்கும் திரு டோங் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

சட்ட அமைச்சருமான டோங், “காவல்துறையில் வேலை செய்வது கடினமான ஒன்று. நமது நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் எப்போது வேண்டுமானாலும் பிரச்சினை வரும். அதனால் காவல்துறை அதிகாரிகள் எப்போதும் விழிப்புடன் இருப்பார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“எல்லா நேரமும் அயராத உழைத்துத் தங்களது உயிரைப் பணயம் வைத்து நாட்டு மக்களுக்காகவும் நாட்டு அமைதிக்காகவும் அர்ப்பணிப்புடன் வாழும் அதிகாரிகளுக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்,” என்றார் அமைச்சர் டோங்.

சிங்கப்பூரில் 1975ஆம் ஆண்டு காவல்துறை தேசிய சேவை தொடங்கப்பட்டது.

1974ஆம் ஆண்டு லாஜூ பயங்கரவாதச் சம்பவம் நடந்ததையடுத்து காவல்துறை தேசிய சேவை பிரிவு உருவானது. லாஜூ பயங்கரவாதச் சம்பவம் சிங்கப்பூரில் நடந்த முதல் அனைத்துலக பயங்கரவாதச் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்