பிரதமர் லாரன்ஸ் வோங்கும் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் இருந்தபோது தேசிய தினக் கொண்டாட்டத்தில் பலமுறை கலந்துகொண்டனர்.
ஆனால் அண்மையில் சிங்கப்பூரின் பிரதமராக திரு லாரன்ஸ் வோங்கும் அதிபராக திரு தர்மன் சண்முகரத்னமும் பதவி ஏற்றனர்.
பிரதமராக திரு வோங்கும் அதிபராக திரு தர்மனும் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறும் தேசிய கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை.
இருவரும் பாடாங் திடலை அடைந்தபோது அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டம் ஆரவாரம் செய்து அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைக் குழுவின் தலைவராக திரு வோங்கை அவரது கட்சியினர் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது
மே மாதம் 15ஆம் தேதியன்று அவர் சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவி ஏற்றார்.
2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் திரு தர்மன் அபார வெற்றி பெற்று சிங்கப்பூரின் அதிபராகப் பதவி ஏற்றார்.
தேசிய தின அணிவகுப்பில் கௌரவ மரியாதை அணியினரை அவர் பார்வையிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அணிவகுப்பில் பங்கெடுத்த சீருடை அணிந்த வீரர்கள், வீராங்கனைகள் சிலரிடம் அவர் பேசினார்.
தேசிய தினம் குறித்து ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று அதிபர் தர்மன் சமூக ஊடகத்தில் தமது கருத்துகளைப் பதிவிட்டார்.
பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூர் வீரர்களின் சாதனைகளைப் பற்றி குறிப்பிட்டு அவர்களைப் பாராட்டினார்.
நாட்டின் எதிர்காலத்துக்கு என்றும் தளராது வலிமையுடன் இருக்கும் சிங்கப்பூர் உணர்வு மிகவும் முக்கியம் என்று அவர் பதிவிட்டார்.
மகிழ்ச்சியான காலகட்டங்களிலும் சவால்மிக்க காலகட்டங்களிலும் சிங்கப்பூர் உணர்வை கைவிட்டுவிடக்கூடாது என்று அதிபர் தர்மன் வலியுறுத்தினார்.

