கடந்த இரு நாள்களில் 280,000 பேர் சிங்கப்பூரில் இருந்து தரைவழி எல்லை வழியாக மலேசியாவுக்குச் சென்றனர்

கடந்த இரு நாள்களில் 280,000 பேர் சிங்கப்பூரில் இருந்து தரைவழி எல்லை வழியாக மலேசியாவுக்குச் சென்றனர்

1 mins read
c8eeb75b-1ede-4c3e-8c03-59f06e0b2f96
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 7.20 மணிக்கு கடற்பாலத்தில் நிலவிய போக்குவரத்து நெரிசல். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையும் நேற்று சனிக்கிழமையும் கிட்டத்தட்ட 280,000 பயணிகள் சிங்கப்பூரில் இருந்து தரைவழி எல்லை வழியாக மலேசியாவுக்குச் சென்று இருக்கிறார்கள்.

குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம் இன்று ஞாயிற்றுக்கிழமை இதனை தெரிவித்தது. அடுத்த சில நாள்களில் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் சிங்கப்பூருக்குத் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுவதால் தரைவழி எல்லைச் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்துத் தேக்கம் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆணையம் தெரிவித்தது.

முன்னதாகவே திட்டமிட்டு நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கும் புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கும் இடையில் உச்ச நேரத்தில் சிங்கப்பூருக்குத் திரும்புவதை தவிர்த்துக்கொள்ளும்படி பயணிகளுக்கு ஆணையம் ஆலோசனை கூறியது.