நீ சூன் குழுத்தொகுதிக்கான முதன்மை அமைச்சர் கா சண்முகம் பொதுத் தேர்தலில் அங்கு நான்கு புதுமுகங்கள் அறிமுகமாகக்கூடும் என்று கூறியுள்ளார்.
ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறவுள்ள செய்தியாளர் கூட்டத்தில் விரிவான தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படும்.
நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சயிட் ஹருன் அல்ஹப்ஸி, 40, பூச்சிக் கட்டுப்பாட்டுத் துப்புரவு நிறுவனத் தலைவர் திரு ஜேக்சன் லாம், 40, தெமாசெக்கிற்காகப் பணியாற்றிய 36 வயது திருவாட்டி லீ ஹுய் யிங், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் இயக்குநர் திருவாட்டி கோ ஹன்யன் ஆகிய நான்கு புதுமுகங்கள் நீ சூனில் போட்டியிடக்கூடும்.
ரெயின்ஃபோரஸ்ட் வைல்ட் பூங்காவிற்கு நீ சூன் குழுத்தொகுதி உறுப்பினர்களுடன் சென்றிருந்த உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் செய்தியாளர்களிடம் (ஏப்ரல் 19) பேசினார்.
புதுமுகங்கள் ஏற்கெனவே குழுத்தொகுதியில் காணப்பட்டுள்ளனர் என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.
மனோவியல் நிபுணரான டாக்டர் ஹருன் தமது தொகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் குடியிருப்பாளர்களைச் சந்தித்திருப்பதாகத் திரு சண்முகம் சொன்னார்.
முன்னாள் மக்கள் செயல் கட்சி கிளை செயலாளரும் தலைவருமான திரு ஜேக்சனும் மக்களை அவ்வப்போது சந்திப்பதை அவர் சுட்டினார்.
புதுமுகங்களுடன் திரு சண்முகம் நீ சூன் குழுத்தொகுதியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
உள்துறை அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு ஆகியவற்றுக்கான துணையமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் ஏப்ரல் 11ஆம் தேதி நீ சூனிலிருந்து புதிதாக அமைக்கப்பட்ட மரின் பரேட்- பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதிக்குச் செல்வதாக அறிவித்தார்.
எதிர்க்கட்சியான ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி நீ சூனில் களமிறங்கும் என்று அறிவித்துள்ளது.

