தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாதின் தேவைக்கு அப்பால் சேகரிக்கும் பழக்கத்தால் அண்டை வீட்டார் பாதிப்பு

1 mins read
4101f93a-1ab6-489c-8dfb-cd522d131060
தாம் சேகரித்த பொருள்கள் நிறைந்த வீட்டில் அமர்ந்திருந்த மாது. - படங்கள்: சின் மின் நாளிதழ்
multi-img1 of 2

வாம்ப்போ டிரைவில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சி கழகக் குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் மாது ஒருவரின் பொருள்களைத் தேவைக்கு அப்பால் சேகரிக்கும் பழக்கம் அவரின் அண்டை வீட்டாருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.

அண்டை வீட்டில் வசிப்பவர் ஒருவர் அந்த மாதின் வீட்டைக் ‘ குப்பைக் கிடங்கு’ என அழைத்ததாக சின் மின் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கழிப்பறை அடைப்பு, மேற்கூரையிலிருந்து துர்நாற்றம் வீசும் நீர் வடிதல் போன்ற பிரச்சினைகளை அந்தக் குடியிருப்பால் அண்டை வீட்டார்கள் எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

சீன ஊடகத்தின் செய்தியாளர் அவ்வீட்டைப் பார்க்கச் சென்றபோது, ​​வீட்டின்முன் கதவிலிருந்து துர்நாற்றம் வீசும் நீர் கசிவதைக் கண்டதாகக் கூறப்பட்டது.

அக்குடியிருப்பில் வசிக்கும் 70 வயது மாது, தம்முடைய பொருள்களை அதிகமாகச் சேகரிக்கும் பழக்கத்தை ஆதரித்துப் பேசியதாகவும் தம் வீட்டில் இருக்கும் அனைத்து பொருள்களும் பயனுள்ளவை என அவர் கூறியதாகவும் சின் மின் சொன்னது.

அந்த மாதின் தாயார் பல ஆண்டுகளுக்கு முன் மாண்டதாகவும் சகோதரர் திருமணத்திற்குப் பிறகு அவ்வீட்டை விட்டுச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரின் தனிமை அந்தப் பழக்கத்தை அதிகமாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போதெல்லாம் வீட்டைச் சுத்தம் செய்வதாக அந்த மாது வாக்குறுதி அளிப்பார். ஆனால், அதைச் செய்யமாட்டார் என மற்றொரு அண்டை வீட்டார் சின் மின் நாளிதழிடம் கூறினார்.

அதுகுறித்து அந்த மாதிடம் கேட்டபோது, தேவை வரும்போது சுத்தம் செய்வேன் எனக் கறாராகக் கூறியதாக சின் மின் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்