ஓசிபிசி, ஷெங் சியோங் ஆகியவற்றின் வளர்ச்சியால் சீரான சிங்கப்பூர் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு

ஓசிபிசி, ஷெங் சியோங் ஆகியவற்றின் வளர்ச்சியால் சீரான சிங்கப்பூர் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு

2 mins read
ba81ec05-870b-4cf5-bfa1-9421c44ac881
ஃபோர்ப்ஸ் இதழ் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) வெளியிட்ட 2026ஆம் ஆண்டிற்கான சிங்கப்பூர் செல்வந்தர்களின் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்ட ஃபேஸ்புக் இணை நிறுவனர் எட்வார்டோ சாவர். - படம்: புளூம்பெர்க்
Google News Preferred Icon

ஓசிபிசி வங்கி, செங் சியோங் பேரங்காடி ஆகியவற்றின் வலுவான வளர்ச்சி ‘சீ’ நிறுவனத்தின் நிறுவனர், ஃபேஸ்புக் இணை நிறுவனர் எட்வார்டோ சாவர் ஆகியோரின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட கிட்டத்தட்ட 16 பில்லியன் அமெரிக்க டாலர் சரிவை ஈடுசெய்துள்ளது.

இதனால், ஃபோர்ப்ஸ் இதழ் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) வெளியிட்ட 2026ஆம் ஆண்டிற்கான சிங்கப்பூரின் 50 செல்வந்தர்களின் மொத்த நிகரச் சொத்து மதிப்பு 239 பில்லியன் அமெரிக்க டாலராக மாற்றமின்றி உள்ளது.

திரு சாவரின், 32.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.

அந்த வரிசையில், சிடிஎல் நிறுவனத்தின் கெக் லெங் பெங் குடும்பத்தினர் 16.1 பில்லியன் அமெரிக்க டாலருடன் இரண்டாம் இடத்தையும் ஃபார் ஈஸ்ட் அமைப்பின் ராபர்ட் இங், ஃபிலிப் இங் சகோதரர்கள் 14.3 பில்லியன் அமெரிக்க டாலருடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

ஓசிபிசி வங்கியின் லீ குடும்பத்தின் சொத்து மதிப்பு 78 விழுக்காடு உயர்ந்து 13.8 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டி, நான்காம் இடத்தைப் பிடித்தது.

பொருளியல் சூழலும் தொழில் மாற்றங்களும்

சிங்கப்பூரின் பாதுகாப்பான வர்த்தகச் சூழலால் ஓசிபிசி வங்கியின் பங்குகள் இருமடங்காக உயர்ந்தன.

குடியிருப்புப் பேட்டைகளில் கடைகளை விரிவுபடுத்திய செங் சியோங் தலைமை நிர்வாகி லிம் ஹோக் சீ 2.7 பில்லியன் அமெரிக்க டாலருடன் 24வது இடத்தைப் பெற்றார்.

அதேவேளையில், செயற்கை நுண்ணறிவுக்கான செலவினங்களால் மெட்டா பங்குகள் சரிந்ததாலும், ‘டிக்டாக் ஷாப்’ இணைய வர்த்தக நிறுவனத்தால் ‘சீ’ நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியடைந்ததாலும் தொழில்நுட்பத் துறைத் தலைவர்களின் சொத்து மதிப்பு சரிந்தது.

2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் சிங்கப்பூர் பொருளியல் 6.1 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. இதனால், ‘ஃபோர்ப்ஸ்’ பட்டியலில் இடம்பெற்ற 50 பேரில் 35 பேரின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
செல்வந்தர்பணம்ஓசிபிசி