பாதிக்கப்பட்ட ‘நெட்ஸ்’ கட்டணச் சேவை வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சரிசெய்யப்பட்டதாக நெட்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
நெட்ஸ் கட்டணச் சேவை வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.25 மணிக்கு பாதிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அச்சேவை சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் நெட்ஸ் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
“பயனீட்டாளர்களின் பொறுமைக்கும் புரிந்துகொள்ளும் தன்மைக்கும் நன்றி,” என அந்தப் பதிவில் அந்நிறுவனம் குறிப்பிட்டது.
நெட்ஸ் சேவை பாதிப்பால் மதிய உணவு இடைவேளையின்போது கட்டணம் செலுத்த முடியாமல் தங்களுக்குச் சிரமம் ஏற்பட்டதாக பயனீட்டாளர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்.

