தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூக சேவை முகமைத் திட்டங்களை அளவிட $7.5 மி. நிதியம்

2 mins read
d8a68f55-6d6d-4ee4-aafa-98a2d4397767
புதன்கிழமை (ஜூலை 2ஆம் தேதி) சமூக சேவை தொடர்பான உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய மசகோஸ் ஸுல்கிஃப்லி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமூக சேவை முகமைகள் தங்கள் திட்டங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பீடு செய்து அவற்றை மேம்படுத்துவதுடன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்க உதவி புரிவதற்கென $7.5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியத்தை தேசிய சமூக சேவை மன்றம் உருவாக்கியுள்ளது.

எஸ்ஜி60 நீடித்த நிலைத்தன்மையை நோக்கி (The SG60 Towards Sustainability Fund) என்ற நிதியம் தகுதிபெறும் முகமைகளுக்கு சிறப்பு வழங்கீடாக ஒருமுறை மட்டும் $30,000 வழங்கும்.

தகுதிபெறும் முகமைகளுக்கு வழங்கப்படும் இந்த நிதி அவற்றின் ஆற்றலை வலுவாக்க உதவுவதுடன் தொடர்நிலையில் நன்கொடை பெறவும் உதவும். அத்துடன், அவற்றின் திட்டங்கள் நீடித்திருக்கவும் இது உறுதி செய்யும் என்று புதன்கிழமை (ஜூலை 2) சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறினார்.

சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடைபெற்ற உச்சநிலை மாநாட்டில் ஏறக்குறைய 2,000 தொழில்துறை நிபுணர்கள், வெளிநாட்டு பேராளர்கள் கலந்துகொண்ட இரண்டு நாள் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்.

தேசிய சமூக சேவை மன்றத்தில் உறுப்பினர்களாக விளங்கும் சமூக சேவை முகமைகள் இந்த நிதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் பேசிய திரு மசகோஸ், மேலும் சிறப்பான வகையில் தாக்கம் ஏற்படுத்தவும், சமூக சேவை முகமைகளின் ஆற்றல்களை மேம்படுத்தி அந்தத் துறையைச் சேர்ந்த நிபுணர்களுக்கு கைகொடுத்து உதவி செய்து சமூக சேவைத் துறையை மேல்நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்று திரு மசகோஸ் விளக்கினார்.

சமூக சேவைத் துறைக்கு ஆதரவு வழங்கும் விதத்தில் தமது அமைச்சு பலவித மின்னிலக்கத் தளங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தத் துறைக்கு வரும் பிரச்சினைகளை சீராக நிர்வகிக்க, அவற்றின் பணியை தானியக்க முறையில் கையாள, வாடிக்கையாளர், அவர்தம் குடும்பங்களுக்கு செயல்பாடுகளை விளக்க தமது அமைச்சு ‘கேஸ்சென்ட்ரல்’ (CaseCentral) என்ற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் தளத்தைப் செயல்படுத்துவதாக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி சொன்னார்.

தொழில்நுட்பத்தில் இருக்கும் பயன்கள், ஆபத்துகள் குறித்தும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தமது உரையில் எடுத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்
சமூக சேவைசமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுமின்னிலக்கம்