தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய தின அணிவகுப்பு ஆகாய சாகசத்தில் புதிய அங்கம்

2 mins read
989ac9c9-07f6-47f3-90ce-0fe3ce768c79
இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்ட போர் விமான சாகசத்தில் ஒரு புதிய அம்சத்தை எதிர்பார்க்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்ட போர் விமான சாகசத்தில் ஒரு புதிய அம்சத்தை எதிர்பார்க்கலாம்.

இரண்டு சிறப்பு எஸ்ஜி60 ஆகாயக் கண்காட்சியுடன் முதல் முறையாக வெவ்வேறு திசைகளிலிருந்தும் உயரங்களிலிருந்தும் பறந்துவரும் போர் விமானங்கள் ஒரே புள்ளியில் ஒரே நேரத்தில் ஆகாயத்தில் சந்திக்கும் காட்சியும் இடம்பெறுகிறது. இந்தச் சாகசம் மல்டி எக்ஸிஸ் (Multi-Axis) என்று அழைக்கப்படுகிறது.

ஆறு எஃப்-15எஸ்ஜி ரக போர் விமானங்கள் அம்பு வடிவில் பாடாங்கைக் கடந்து செல்லும். அதற்குப் பின்னால் நான்கு எஃப்-16 ரகப் போர் விமானங்கள் சாய்சதுரம் (diamond) வடிவில் பறந்து செல்லும். சிங்கப்பூர் வைர விழாவை அனுசரிக்கும் வகையில் அந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

“மல்டி எக்ஸிஸ் சாகசத்தில் எதிர் எதிர் திசைகளிலிருந்து வெவ்வேறு உயரங்களிலிருந்து போர் விமானங்கள் ஒன்றையொன்று நோக்கி வரும். அது ஒரு சவால்,” என்றார் லெஃப்டிணன்ட் கர்னல் முகமது இஸ்கந்தார்.

“பாடாங் அரங்கிற்கு மேல் சரியான நேரத்தில் சந்திக்கவேண்டும் என்றால் அனைத்தும் மிக துல்லியமாகக் கணக்கிடப்பட்டிருக்கவேண்டும்,” என்று திரு இஸ்கந்தார் குறிப்பிட்டார்.

இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பில் சிங்கப்பூர் ஆகாயப் படையைச் சேர்ந்த 26 போர் விமானங்களைக் காண முடியும்.

ஆறு எஃப்-15எஸ்ஜி போர் விமானங்கள், ஒரு ஏ330 பல பயன் எண்ணெய் போக்குவரத்து விமானம், ஒரு ஜி550 ரக விமானம், இரண்டு சி-130 ஹெர்கியுலிஸ் விமானம், ஒரு எஸ்-70பி ரக சிஹாக் ஹெலிகாப்டர், நான்கு ஏஹெச்-64டி ரக அபாச்சே அடெக் ஹெலிகாப்டர் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

தேசிய தின அணிவகுப்பில் சிங்கப்பூர் ஆகாயப் படையைச் சேர்ந்த 26 போர் விமானங்களைக் காண முடியும்.
தேசிய தின அணிவகுப்பில் சிங்கப்பூர் ஆகாயப் படையைச் சேர்ந்த 26 போர் விமானங்களைக் காண முடியும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்