சுகாதாரப் பராமரிப்புடன் ஆராய்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைக்க புதிய ஒப்பந்தம்

சுகாதாரப் பராமரிப்புடன் ஆராய்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைக்க புதிய ஒப்பந்தம்

1 mins read
8a5ab14a-f48f-416f-9e40-d249cee05ea3
சிங்கப்பூரின் மூன்றாவது மருத்துவப் பள்ளியான லீ கோங் சியன் மருத்துவப் பள்ளி. - படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் ஆராய்ச்சியை சிறப்பான முறையில் ஒருங்கிணைக்க நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (NTU) மருத்துவப் பள்ளியுடன் தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் பங்காளித்துவம் ஒன்றை ஏற்படுத்த உள்ளது.

மூப்படையும் மக்கள்தொகை, அதிகரிக்கும் நாள்பட்ட நோய்கள் போன்ற சவால்களைச் சமாளிக்க நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் லீ கோங் சியன் மருத்துவப் பள்ளியுடன் (LKCMedicine) நாளை (அக்டோபர் 10) அதற்கான புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் அந்தக் குழுமம் கையெழுத்திடும்.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெறும் 22வது சிங்கப்பூர் சுகாதார, உயிர்மருத்துவ மாநாட்டில் அந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

2020ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட அந்தப் பள்ளி சிங்கப்பூரின் மூன்றாவது மருத்துவப் பள்ளி ஆகும்.

அதேபோல, சிங்கப்பூரின் வடக்கு மற்றும் மத்திய வட்டாரங்களில் பொது சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை அளித்து வருவது தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் ஆகும்.

குறிப்புச் சொற்கள்
சுகாதாரம்மக்கள்தொகைஆராய்ச்சி