ஒன் நார்த்தில் புதிய ‘ஏஐ’ பூங்கா

ஒன் நார்த்தில் புதிய ‘ஏஐ’ பூங்கா

1 mins read
55654075-cc5b-4914-b464-0f77d974a5ec
ஜேடிசி கழகம் ஒன் நார்த் வட்டாரத்தில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பூங்காவை அமைக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஜேடிசி கார்ப்பரேஷன் கழகம் ஒன் நார்த் வட்டாரத்தில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) பூங்காவை அமைக்க உள்ளது.

‘ஏஐ’ தீர்வுகளை அளவிடும் புத்தாக்கமிக்க மைய சோதனைத் தளமாக இந்தப் பூங்கா செயல்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் வியாழக்கிழமை (பிப்ரவரி 12) தெரிவித்தார்.

‘லோரோங் ஏஐ’ எனப்படும் ஏஐ சமூகங்கள் இணைந்து பணியாற்றுவதற்கான இடத்தில் இந்தப் பூங்கா அமைகிறது.

புதிய யோசனைகள், பங்காளித்துவங்களை உருவாக்கவும் இந்தப் பூங்கா தனித்தனிப் பிரிவுகளாகச் செயல்படும் என்றார் அவர்.

அத்துடன், வணிகங்களுக்கும் பொதுச் சேவைகளுக்குமான நடைமுறை தீர்வுகளாக ‘ஏஐ’ முன்முயற்சிகளை இந்தப் பூங்கா ஊக்குவிக்கும் என்றார் அவர்.

இவ்வாண்டின் வர்த்தக, தொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் இதுகுறித்த மேல் விவரங்கள் பகிரப்படும்.

குறிப்புச் சொற்கள்
Budget 2026பட்ஜெட் 2026லாரன்ஸ் வோங்வரவுசெலவுத் திட்டம்வரவுசெலவுத் திட்டம் 2026ஏஐசெயற்கை நுண்ணறிவு