தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

25,000 வழக்குகளின் தீர்ப்புகளை வழக்கறிஞர்கள் ஆராய புதிய செயற்கை நுண்ணறிவுச் சேவை

2 mins read
8e11abf3-1b77-4c73-8f78-e609f5c83a01
புதிய செயற்கை நுண்ணறிவு சேவையுடன் சிங்கப்பூர் பயிற்சிக் கழகத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி கெண்டா குசானோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 1965 முதல் நீதித்துறை வரலாறு முழுவதும் உள்ள ஏறக்குறைய 25,000 வழக்குகளின் தீர்ப்புகளை ஆய்வு செய்து அவற்றைச் சுருக்க, இங்குள்ள வழக்கறிஞர்கள் புதிய செயற்கை நுண்ணறிவுச் சேவையைப் பயன்படுத்தலாம்.

சிங்கப்பூர் சட்டப் பயிற்சிக் கழகத்தாலும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தாலும் உருவாக்கப்படும் அந்தச் சேவை, பயிற்சிக் கழகத்தின் LawNet சட்ட ஆய்வு இணையத்தளத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 12) அறிமுகம் செய்யப்படும். வழக்குகளுக்கு மேலும் ஆக்ககரமான முறையில் வழக்கறிஞர்கள் ஆயத்தமாவதற்கு உதவுவதே அதன் இலக்காகும்.

LawNet AI எனப்படும் அப்புதிய சேவை, TechLaw.Fest எனும் சட்டக் கருத்தரங்கு ஒன்றில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

இங்குள்ள கிட்டத்தட்ட அனைத்து வழக்கறிஞர்களும் LawNet சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

1990ல் சிங்கப்பூர் சட்டப் பயிற்சிக் கழகத்தால் அமைக்கப்பட்ட அச்சேவை, கடந்தகால வழக்குகளை ஆராய உதவுகிறது.

கடந்த காலத்தில் சட்ட அலுவலர்களால் கிட்டத்தட்ட 9,000 வழக்கு அறிக்கைகள் சுருக்கப்பட்டுள்ளதாக பயிற்சிக் கழகத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி கெண்டா குசானோ தெரிவித்தார். எஞ்சிய 15,000 வழக்கு தீர்ப்புகளின் சுருக்கத்தை வழக்கறிஞர்கள் தேவைக்கேற்ப பெற இந்தச் செயற்கை நுண்ணறிவுச் சேவை அவர்களுக்கு உதவும் என்றார் அவர்.

செயற்கை நுண்ணறிவு தவறான அல்லது அர்த்தமில்லாத முடிவுகளை வெளியிடும் அபாயத்தைக் குறைக்க, செயற்கை நுண்ணறிவால் உருவான கிட்டத்தட்ட 350 முடிவுகள் நீதிபதிகளின் சட்ட அலுவலர்களால் மறுஆய்வு செய்யப்பட்டன. நீதிமன்ற விசாரணையின்போது நீதிபதிகளுக்கு ஆதரவளிக்கும் அந்த அலுவலர்கள், வழக்குகள் சுருக்கப்படுவது குறித்து பரிட்சயமாக உள்ளதாக திரு குசானோ சொன்னார்.

“செயற்கை நுண்ணறிவை மேலும் துல்லியமாக்க, மறுஆய்வு செய்யப்பட்ட பிரதிகள் அதில் பயன்படுத்தப்பட்டன,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்