பொதுச் சேவைப் பிரிவின் புதிய நியமனங்கள்

பொதுச் சேவைப் பிரிவின் புதிய நியமனங்கள்

1 mins read
ஒருவர் ஓய்வுபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
ef820dc8-1b01-45cf-8f46-5be68f4b13ca
தேசிய ஆய்வு, வளர்ச்சி மற்றும் பிரதமர் அலுவலகத்தின்கீழ் வரும் அரசாங்கத் துறை அறிவியல், தொழில்நுட்பக் கொள்கை, திட்டங்கள் அலுவலகம் ஆகியவற்றுக்கு நிரந்தரச் செயலாளராகப் பொறுப்பு வகித்த பேராசிரியர் டான் சோர் சுவான் பதவி விலகுகிறார். - படம்: பொதுச் சேவைப் பிரிவு
multi-img1 of 3

பொதுச் சேவைப் பிரிவு நிரந்தரச் செயலாளர் நியமனங்களை வியாழக்கிழமை (ஜூலை 30) அறிவித்தது.

அதோடு, அப்பிரிவிலிருந்து ஒருவர் ஓய்வுபெறப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் இந்த மாற்றங்கள் நடப்புக்கு வரும்.

தேசிய ஆய்வு, வளர்ச்சி மற்றும், பிரதமர் அலுவலகத்தின்கீழ் வரும் அரசாங்கத் துறை அறிவியல், தொழில்நுட்பக் கொள்கை, திட்டங்கள் அலுவலகம் ஆகியவற்றுக்கு நிரந்தரச் செயலாளராகப் பொறுப்பு வகித்த பேராசிரியர் டான் சோர் சுவான், 67, அப்பதவியிலிருந்து விலகுகிறார்.

அப்பொறுப்பை திரு இங் சாட்-சோன் ஏற்பார். அதோடு, தற்காப்பு அமைச்சின் தற்காப்பு வளர்ச்சிக்கான நிரந்தரச் செயலாளராகவும் அவர் பொறுப்பு வகிப்பார். திரு மெல்வின் ஓங் சு கியாட்டிடமிருந்து அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.

எனினும், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழலுக்கான நிரந்தரச் செயலாளர் பொறுப்பை திரு ஓங் தொடர்ந்து வகிப்பார்.

மேலும், தற்காப்பு, அறிவியல், தொழில்நுட்ப அமைப்புத் தலைமை நிர்வாகி பொறுப்பை ரோய் சான் ஏற்பார். அப்பொறுப்பை திரு இங் சாட்-சோன் வகித்துவந்தார்.

தற்காப்பு அமைச்சு வியாழக்கிழமை இதனை அறிவித்தது. திரு சான், 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதியிலிருந்து தற்காப்பு, அறிவியல், தொழில்நுட்ப அமைப்பின் செயல்பாடுகளுக்கான துணைத் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பு வகித்துவந்தார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்நிரந்தரச் செயலாளர்பதவிஅறிவிப்பு