நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவுக் கருவி

நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவுக் கருவி

1 mins read
1e7d2355-8605-467b-b8af-849980e51828
நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்தைக் கண்டறிய புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவி அறிமுகம் காணவுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒரு தனிநபரின் தற்போதைய உடல்நிலையை மதிப்பாய்வு செய்வதன் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அவருக்கு நீரிழிவு, உயர் ரத்தக் கொழுப்பு போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவுக் கருவி ஒன்றைச் சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தக் கருவி, ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ திட்டத்தில் பதிவுசெய்துள்ள அனைவருக்கும் சேவையளிக்க 2027 தொடக்கம் முதல் மருத்துவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (மார்ச் 5) நடந்த சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசியபோது அவர் இதனைக் கூறினார்.

இந்தக் கருவி மூலம், ஒருவருக்கு நாள்பட்ட நோய் ஏற்படும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டால், மருத்துவர் அவரின் வாழ்க்கைமுறையில் செய்துகொள்ள வேண்டிய மாற்றங்களைப் பரிந்துரைக்கலாம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பதற்குப் பதிலாக ஆண்டுதோறும் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் மருத்துவர் பரிந்துரைக்கலாம் என்று திரு ஓங் தெரிவித்தார்.

‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ திட்டத்தின்கீழ் இந்தக் கூடுதல் பரிசோதனைகளுக்கு தொடர்ந்து மானியம் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்