தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய இடங்கள், குறைந்த விலை; ஜெட்ஸ்டார் ஏஷியா திட்டம்

1 mins read
1cd95c19-872d-4948-8131-18b0220e8447
2023ஆம் ஆண்டு 2 மில்லியனுக்கும் அதிகமான பயணச்சீட்டுகளை ஜெட்ஸ்டார் ஏஷியா விற்றுள்ளது. - படம்: ஜெட்ஸ்டார் ஏஷியா

ஜெட்ஸ்டார் ஏஷியா, சிங்கப்பூரில் அதன் சேவையைத் தொடங்கி 20 ஆண்டுகள் ஆகிறது. அதைக்கொண்டாடும் விதமாக பல நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்து வருகிறது.

இந்நிலையில், சில சிறப்பு இடங்களுக்கு மலிவு விலையில் பயணச்சீட்டுகளை விற்க ஜெட் ஸ்டார் ஏஷியா திட்டமிட்டுள்ளது.

சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் ஜெட்ஸ்டார் ஏஷியா விமானங்களுக்கு அந்தச் சலுகை பொருந்தும் என்று கூறப்பட்டது.

கொவிட்-19க்குப் பிறகு ஜெட்ஸ்டார் ஏஷியாவில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும், கொவிட்-19 காலகட்டத்திற்கு முன் இருந்ததைவிட தற்போது ஜெட்ஸ்டார் ஏஷியாவிடம் விமானங்கள் குறைவாக உள்ளன.

கொவிட்-19க்கு முன் ஜெட்ஸ்டார் ஏஷியாவிடம் 18 விமானங்கள் இருந்தது, தற்போது 11 விமானங்கள் மட்டுமே உள்ளன. அவற்றின் மூலம் 8 நாடுகளில் உள்ள 17 இடங்களுக்கு அது சேவை வழங்குகிறது.

மீண்டும் பழைய நிலைக்கு வர முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்பிக்கை தருவதாகவும் ஜெட்ஸ்டார் ஏஷியா கூறியது.

கொழுப்பு, மேடான் உள்ளிட்ட இடங்களுக்கு சேவையை வழங்க ஜெட்ஸ்டார் ஏஷியா திட்டமிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு 2 மில்லியனுக்கும் அதிகமான பயணச்சீட்டுகளை ஜெட்ஸ்டார் ஏஷியா விற்றுள்ளது, அதில் மூன்றில் இரண்டு பங்கு பயணச்சீட்டுகள் 100 வெள்ளிக்குகீழ் குறைவானது என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்