நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 11) அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவின்கீழ், நிறுவனங்கள் நொடித்துப்போகும் திட்டம் மேம்படுத்தப்பட்டு நிரந்தரமாக்கப்படும் என்பதால், எளிமையான, குறைந்த செலவில் நிறுவனங்கள் நொடித்துப்போவதற்கான நடைமுறை மூலம் மேலும் பல நிறுவனங்கள் பயனடையும்.
நொடிப்புநிலை, மறுசீரமைப்பு மற்றும் நிறுவன கலைப்பு திருத்த மசோதா, நொடித்துப்போகும் திட்டத்தின் கீழ் இரண்டு நடைமுறைகளை மாற்ற முயல்கிறது.
நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்ட கடன் மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் நிறுவனத்தை மூடும் எளிமைப்படுத்தப்பட்ட திட்டம் ஆகியவற்றை மசோதாவில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பிரதிபலிக்கும்.
புதிய நடைமுறைகளுக்கு ஒரே ஒரு பொதுவான தகுதி அளவுகோல் இருக்கும். அதாவது நிறுவனத்தின் மொத்த கடன் அளவு S$2 மில்லியனுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சிறிய மற்றும் குறு நிறுவனங்களைத் தவிர்த்த மற்ற நிறுவனங்கள் நொடித்துப்போகும் திட்டத்தில் இருந்து பயனடைய இது அனுமதிக்கும் என்று சட்ட அமைச்சு தெரிவித்தது.


