தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மத்திய வட்டாரத்தையும் தெங்கா பேட்டையையும் இணைக்கும் புதிய பேருந்து சேவை

1 mins read
95ad8f21-6f88-4a13-a4ce-6f174889d002
வார நாள்களில் மத்திய வட்டாரத்தையும் (CBD) தெங்கா பேட்டையையும் இணைக்கும் புதிய பேருந்து சேவை நவம்பர் 25ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வார நாள்களில் மத்திய வட்டாரத்தையும் (CBD) தெங்கா பேட்டையையும் இணைக்கும் புதிய பேருந்து சேவை நவம்பர் 25ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

காலை மற்றும் மாலை உச்ச நேரங்களில் இரண்டு முறை அந்த போக்குவரத்து சேவை இயங்கும்.

674 எண் கொண்ட ‘டவர் டிரான்சிட்’இன் பேருந்து அந்த சேவையை வழங்கும்

தெங்கா டிரைவில் இருந்து காலை 7.35 மற்றும் 7.50 மணிக்கு 674 பேருந்து சேவை இடம்பெறும்.

மாலை 6.15 மற்றும் 6.30 மணிக்கு மரீனா பே ரயில் நிலையத்தில் இருந்து 674 பேருந்து சேவை இடம்பெறும்.

இந்தப் புதிய பேருந்து சேவை பொது விடுமுறை நாள்களில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது.

பேருந்து இணைப்பை மேம்படுத்தும் திட்டத்தின் (BCEP) கீழ் இந்தப் புதிய பேருந்து சேவை செயல்படுகிறது.

புதிதாக உருவாக்கப்படும் பேட்டைகளுக்கு சீரான பொது போக்குவரத்து வசதிகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கம் பேருந்து இணைப்பை மேம்படுத்தும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்