புவாங்கோக் வட்டாரத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவ்வட்டாரக் குடியிருப்பாளர்களுக்குக் கூடுதல் வசதி கிடைத்துள்ளது.
புவாங்கோக்கில் பேருந்து சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
செங்காங், சாங்கி விமான நிலையம், பீஷான், புக்கிட் தீமா போன்ற வட்டாரங்களுக்கு புவாங்கோக்கிலிருந்து பேருந்து மூலம் செல்லலாம்.
செங்காங் கிராண்ட் மால் கடைத்தொகுதி, புவாங்கோக் எம்ஆர்டி நிலையம் ஆகியவற்றுடன் புவாங்கோக் பேருந்து நிலையம் இணைக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து புவாங்கோக் பேருந்து நிலையத்தில் மூன்று பேருந்து எண்கள் சேவை வழங்கி வருகின்றன.
எஸ்பிஎஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் புதிய பேருந்து நிலையத்தில் படிப்படியாக ஏழு பேருந்து எண்கள் சேவை வழங்கும்.
புதிய பேருந்து நிலையத்தின் அதிகாரபூர்வத் திறப்பு விழா சனிக்கிழமை (ஜனவரி 11) காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
அதில் போக்குவரத்து துணை அமைச்சர் முரளி பிள்ளை கலந்துகொண்டார்.
புவாங்கோக் பேருந்து நிலையத்துடன் சேர்த்து நிலப் போக்குவரத்து ஆணையம் இதுவரை 12 ஒருங்கிணைக்கப்பட்ட போக்குரத்து நிலையங்களைக் கட்டியுள்ளது.
பேருந்து நிலையங்களை எம்ஆர்டி நிலையங்கள், அருகில் உள்ள வசதிகளுடன் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட பேருந்து நிலையங்கள் இணைக்கின்றன.
தற்போது புவாங்கோக் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து எண்கள் 110, 114, 156 ஆகியவை சேவை வழங்குகின்றன.
புவாங்கோக் பேருந்து நிலையம் இணைப்புகளை மேம்படுத்தி கூடுதல் வசதி தந்திருப்பதாக குடியிருப்பாளர்கள் கூறுவது தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக திரு பிள்ளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

