மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள தூண்டும் புதிய அட்டைத் தொகுப்பு

மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள தூண்டும் புதிய அட்டைத் தொகுப்பு

2 mins read
fbac4b95-3ce1-41f0-9283-a5b0133a87b8
மூத்தோரின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் ‘அவர் டைம், அவர் ஸ்டோரிஸ்’ என்ற அட்டை விளையாட்டு அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

“பள்ளியில் யார் உங்கள் உற்ற நண்பர்?”, “வாழ்க்கையில் பின்னோக்கிப் பார்க்கும்போது எதை நினைத்து பெருமிதம் கொள்கிறீர்கள்?”

இத்தகைய கேள்விகள் மலரும் நினைவுகளையும் வாழ்க்கைக் கதைகளையும் பகிர்ந்துகொள்ள மூத்தோருக்குத் தூண்டுதலாக இருக்கின்றன.

அதுபோன்ற பல்வேறு கேள்விகள் அடங்கிய 90 அட்டைகள் கொண்ட தொகுப்பு புதன்கிழமை (ஆகஸ்ட் 4) அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘அவர் டைம், அவர் ஸ்டோரிஸ்’ என்று அழைக்கப்படும் அந்த அட்டைத் தொகுப்பில் பிள்ளைப் பருவம், கல்வி, வேலை, ஓய்வுக்காலம், குடும்பம் ஆகிய தலைப்புகளின்கீழ் பல கேள்விகள் உள்ளன.

டிபிஎஸ் அறநிறுவனம், சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் நினைவாற்றல், அறிவாற்றல் ஆரோக்கிய சமூகத் திட்டத்தின்கீழ் அந்த அட்டைத் தொகுப்பு உருவாக்கப்பட்டது.

டிபிஎஸ் அறநிறுவனம் வழங்கிய $8.95 மில்லியன் நிதி ஆதரவு மூலம் திட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.

தனிப்பட்ட கதைகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் மூத்தோர், பராமரிப்பாளர்கள், தன்னார்வலர்கள், குடும்பத்தினர் ஆகியோர் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே அந்த அட்டைத் தொகுப்பின் நோக்கம்.

மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது மன அழுத்தமும் மறதி நோயின் வீரியமும் குறைவதாக ஆராய்ச்சிகள் சுட்டுகின்றன.

லயன்ஸ் பிஃப்ரென்டர்ஸ், டச் சமூகச் சேவை அமைப்பு, மக்கள் கழகம் உள்ளிட்ட 18 சமூகப் பங்காளி அமைப்புகளுக்கு மொத்தம் 500 அட்டைத் தொகுப்புகள் விநியோகம் செய்யப்படும்.

சிங்கப்பூர், தைவான், ஹாங்காங், சீனா, இந்தியா, இந்தோனீசியா ஆகிய ஆறு ஆசியச் சந்தைகளில் உள்ள 11,500 மூத்தோருக்குப் பழைய நினைவுகளைத் தூண்டும் நடவடிக்கைகளை அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

அட்டை அறிமுகம் நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு, சுகாதார மூத்த துணையமைச்சர் டான் கியெட் ஹாவ், தமது சிறு வயதில் நண்பர்களுடன் செய்த குறும்புகளைப் பற்றி பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவர், சிறு வயதில் நண்பர்களுடன் இணைந்து சிலந்திகளைப் பிடித்து விளையாடியதைக் குறிப்பிட்டார்.

புதிய அட்டைத் தொகுப்பின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு, சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த துணையமைச்சர் டான் கியெட் ஹாவ்.
புதிய அட்டைத் தொகுப்பின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு, சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த துணையமைச்சர் டான் கியெட் ஹாவ். - படம்: சாவ்பாவ்
குறிப்புச் சொற்கள்