தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சாங்கி விமான நிலையத்தில் புதிய சரக்கு கையாளுதல் நிலையம்

செயலாக்க நேரம் குறையும்

2 mins read
எதிர்கால ஐந்தாம் முனையச் செயல்பாடுகளுக்கான சோதனை முறை
91253e8e-8d6e-4334-bbb1-839b387d6815
புதிய 3,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட புதிய சரக்கு கையாளுதல் நிலையம், உள்வரும் விமானச் சரக்கு ஏற்றுமதிகளை 2½ மணி நேரத்திற்குப் பதிலாக இரண்டு மணி நேரத்திற்குள் முடித்து விட முடியும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகிலேயே முதன்முறையாக சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான சரக்கு கையாளும் நிலையம், விமானச் சரக்கு ஏற்றுமதிக்கான செயலாக்க நேரத்தை 20 விழுக்காடு குறைக்கும் திறன் கொண்டுள்ளது. இது செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

புதிய 3,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட புதிய சரக்கு கையாளுதல் நிலையம், சிங்கப்பூருக்கு வரும் விமானச் சரக்கு ஏற்றுமதிகளை 2½ மணி நேரத்திற்குப் பதிலாக இரண்டு மணி நேரத்திற்குள் முடித்து விட முடியும்.

மொத்தமாக ஒன்றுபடுத்துதல் திட்டம் என்பது தனித்தனியான சரக்குகளைக் கையாளும் செயல்முறைகளை விரைவுபடுத்தும். தட்டுகள் அல்லது கொள்கலன்கள் போன்றவற்றில் தனித்தனி சரக்குகள் வைக்கப்பட்டு அவை விமானத்தில் ஏற்றப்படும். இது பொதுவாக, மின்னணு மற்றும் பயனீட்டுப் பொருள்களான துணிகள், வீட்டுப் பொருள்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையம் தொடங்கப்படுவதற்கு முன், சரக்கு அனுப்புபவர்கள் தனித்தனி சரக்குகளை ஒரு கிடங்கிற்குள் கொண்டு சென்று, விமானத்தில் ஏற்றுவதற்காக தட்டுகள் அல்லது கொள்கலன்களில் அடைக்க வேண்டியிருந்தது.

சாங்கி விமான சரக்கு மையத்தில் உள்ள தரைவழி கையாளுதல் சேவை வழங்குநரான சேட்ஸ் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த நிலையம், வரவிருக்கும் ஐந்தாம் முனையம் மற்றும் சாங்கி கிழக்கு தொழிலியல் மண்டலத்திற்கான மேம்படுத்தப்பட்ட விமானச் சரக்கு செயல்முறைகளைச் சோதிக்கும்.

சாங்கி கிழக்கு தொழிலியல் மண்டலம் என்பது விமான நிலையத்தின் ஒரு தளவாடப் பூங்காவாகும். இது விமானச் சரக்கு நடமாட்டத்தை மேம்படுத்துவதோடு, வரவிருக்கும் ஐந்தாம் முனையத்தின் பொருள்களைப் பதப்படுத்துவதற்கான செலவுகளையும் போக்குவரத்து நேரத்தையும் குறைக்கும்.

முந்தைய விமானச் சரக்கு முனையங்களில் சரக்கு கையாளுதல் செயல்முறைகள் மிகவும் அடிப்படையானதாக இருந்தது. ஏனெனில், தொழிலாளர்கள் ஃபோர்க்லிஃப்ட் எனும் எடை தூக்கும் வாகனங்களைச் சரக்குகளை எடையிடும் இயந்திரங்களில் வைக்க வேண்டும். பின்னர் அவற்றைக் கிடங்குகளுக்கு மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு முனையத்திலும் ஒரே ஓர் எடையிடும் இயந்திரம் மட்டுமே இருந்தது. இது பெரும்பாலும் முனையங்களுக்கு அருகிலுள்ள சாலைகளில் நெரிசலுக்கு வழிவகுத்தது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்ற தொடக்க விழாவில் ஊடகங்களிடம் பேசிய சேட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு கெர்ரி மோக், “சிங்கப்பூரின் விமான சரக்குத் துறை தற்போதைய வரிவிதிப்புகளுக்கு மத்தியில் மீள்தன்மையுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது,” என்றார்.

சாங்கி கிழக்கு தொழிலியல் மண்டலம் தயாராகும் வரை, அடுத்த 10 ஆண்டுகளுக்கு புதிய உள்கட்டமைப்பு எதுவும் இருக்காது என்பதால், சேட்ஸ் அதன் தற்போதைய வசதிகளை மேம்படுத்தி, புதிய சவால்களைச் சமாளிக்க தயாராக வேண்டும் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்