மரபணுவியல் சோதனை முயற்சிகளை விரிவுபடுத்தப் புதிய நிலையம்

மரபணுவியல் சோதனை முயற்சிகளை விரிவுபடுத்தப் புதிய நிலையம்

1 mins read
465d4a37-feac-49ed-b730-7deb49e135ee
புதிய நிலையத்தின் திறப்பு விழாவில் தேசிய ஆய்வு அறநிறுவனத் தலைவர் ஹெங் சுவீ கியட் (இடது), என்யுஎச்எஸ் துணைத் தலைமை நிர்வாகி சோங் யாப் செங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மரபணுவியல் (Genomics) தொடர்பிலான அம்சங்கள் தங்களுக்குக்கீழ் பயன்படுத்தப்படுவதாக தேசியப் பல்கலைக்கழக சுகாதார முறை (என்யுஎச்எஸ்) தெரிவித்துள்ளது.

அந்த வகையில், மரபணுவியலில் கவனம் செலுத்தும் புதிய நிலையத்தை என்யுஎச்எஸ் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) தொடங்கி வைத்தது. நோய்களைத் தொடக்கத்திலேயே அடையாளம் காணுதல், அந்தந்த நோய்களுக்கென மேலும் உகந்த வகையில் சிகிச்சை அளித்தல், கூடுதல் துல்லியமான மருந்து வகைகளைப் பரிந்துரைத்தல் போன்ற நடவடிக்கைகளை வலுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளில் புதிய நிலையம் அடங்கும்.

மரபணுவியல் மருத்துவத்துக்கான தேசிய பல்கலைக்கழக நிலையம் (என்யுஜிஇஎம்), சிறார் மற்றும் குழந்தைகளைப் பாதிக்கும் அரியவகை சுகாதாரப் பிரச்சினைகளையும் தாண்டி மற்ற சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் மரபணுவியல் சோதனைகளை விரிவுபடுத்த வகைசெய்யும் என்று என்யுஎச்எஸ் குறிப்பிட்டது. இதன் முலம், என்யுஎச்எஸ்ஸின் பல்வேறு நிபுணத்துவப் பிரிவுகளில் என்யுஎச்எஸ்ஸின் ஆற்றல்கள் ஒன்றிணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிலையம், தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அமைந்துள்ளது. பல்வேறு என்யுஎச்எஸ் கழகங்களைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட பன்முகக் குழு ஒன்று இந்நிலையத்தை வழிநடத்தும்.

தேசியப் பல்கலைக்கழக புற்றுநோய்க் கழகம், தேசிய பல்கலைக்கழக இருதய நிலையத்தைச் சேர்ந்த நிபுணர்கள் உள்ளிட்டோர் அக்குழுவில் இடம்பெறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்