‘ஜேடிசி’க்குப் புதிய தலைவர்

1 mins read
f0e15455-d37e-47cc-80c1-9cf47ad1daf7
திரு சியா சோங் ஹுவீ, ஜூலை 1ஆம் தேதி ‘ஜேடிசி கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்பார். - படம்: வர்த்தக, தொழில் அமைச்சு

‘ஜேடிசி கார்ப்பரேஷன்’ கழகத்தின் புதிய தலைவராகத் திரு சியா சோங் ஹுவீ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 1ஆம் தேதி அவர் அந்தப் பொறுப்பை ஏற்பார் என்று வர்த்தக, தொழில் அமைச்சு வியாழக்கிழமை (ஏப்ரல் 17) தெரிவித்தது.

சிங்கப்பூரின் தொழில்துறை முன்னேற்றத்திற்குப் பொறுப்பு வகிக்கும் ஆணை பெற்ற கழகம் ‘ஜேடிசி கார்ப்பரேஷன்’.

அதன் இப்போதைய தலைவர் டான் சோங் மெங்கிடமிருந்து திரு சியா தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.

தற்போது ‘தெமாசெக் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் திரு சியா, மே 1ஆம் தேதி முதல் ‘ஜேடிசி’யின் ‘அடுத்து பதவியேற்கவிருக்கும் தலைவர்’ என்ற பொறுப்பில் நியமிக்கப்படுவார்.

கழகத்தின் தற்போதைய தலைவர் திரு டான், ஜூன் 30ஆம் தேதி அதிகாரபூர்வமாகப் பதவியிலிருந்து ஓய்வு பெறுவார்.

திரு டான் சோங் மெங்.
திரு டான் சோங் மெங். - படம்: வர்த்தக, தொழில் அமைச்சு

திரு டானின் தலைமைத்துவம், கழகத்துக்கான அவரது பங்களிப்பு ஆகியவற்றுக்கு வர்த்தக, தொழில் அமைச்சின் நிரந்தரச் செயலாளர் பே ஸ்வான் கின் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

புதிய தலைவர் சியா, கழகம் மேலும் சிறப்படைய வழிநடத்துவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்