தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசியச் சமூகச் சேவை மன்றத்திற்குப் புதிய தலைமை நிர்வாக அதிகாரி

1 mins read
127be10d-4545-469e-b47d-0ff58bde7e0e
தேசியச் சமூகச் சேவை மன்றத்திற்குப் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிம் சுங் யர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். - படம்: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு

தேசியச் சமூகச் சேவை மன்றத்திற்குப் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிம் சுங் யர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் மன்றத்தில் பணிபுரிவார்.

தற்போது தேசியச் சமூகச் சேவை மன்றத்திற்குத் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள டான் லி சான் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பொறுப்பிலிருந்து விலகுவார்.

திருவாட்டி டான் பதவி விலகிய பிறகு திரு லிம் முழுமையாகத் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்படுவார் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது திரு லிம் பொதுச் சேவைப் பிரிவில் மூத்த இயக்குநராக உள்ளார். அவர் தலைமைத்துவ மேம்பாடு, திறன் வளர்ப்பு ஆகிய துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

திரு லிம் கலாசார, சமூக, இளையர் அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றிலும் தலைமைத்துவ பொறுப்புகளை வகித்துள்ளார்.

திருவாட்டி டான் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேசியச் சமூகச் சேவை மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

கடினமான கொவிட்-19 காலகட்டத்தில் திருவாட்டி டான் சிறப்பாகச் செயல்பட்டார் என்று அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
சமூக சேவைசமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுநன்கொடை