நீடித்த நிலைத்தன்மை தகவல் வெளியீட்டை வழிநடத்த புதிய மின்னிலக்கக் கருவிகள்

2 mins read
34009eb1-ed7b-4c79-80dc-7e8b158b42ab
ஒரு நிறுவனம் தனது பயன்பாட்டுப் பொருள்கள் அல்லது போக்குவரத்து வாகனங்களில் இருந்து நேரடியாக கரிமத்தை வெளியேற்றுவது ‘ஸ்கோப் 1’ என அளவிடப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் ஜிபிரிண்ட் (Gprint) மின்னிலக்கத் தளத்தின் வாயிலாக கரிமக் குறைப்புக்கான தேவைகளை இங்குள்ள நிறுவனங்கள் பூர்த்தி செய்துகொள்ளலாம்.

சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகத்திற்கான (ESG) தகவல், தரவுத்தளமான ஜிபிரிண்ட், புதன்கிழமை (நவம்பர் 6) சில அறிவிப்புகளை வெளியிட்டது.

இஎஸ்ஜி சம்பந்தப்பட்ட அமைப்புகள் மீதான அழுத்தம் அதிகரிப்பதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல், சமூக நிர்வாகத் தகவல்களை அளிப்பதில் 10ல் 9 உலக நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக ஜிபிரிண்ட் தெரிவித்துள்ளது.

இருந்தபோதிலும், பல நிறுவனங்கள், குறிப்பாக சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அதனை எப்படித் தொடங்குவது என்பதில் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றன.

அது பற்றி விளக்கிய ஜிபிரிண்ட், “சிரமங்களைக் கடக்க ‘ஜிபிரிண்ட் டிஸ்குளோசர்’ மின்னிலக்கக் கருவி எளிதான, தானியக்க, ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீர்வுகளை வழங்குகிறது.

“நிறுவனங்களின் கரிம வெளியீட்டை ‘ஸ்கோப் 1, ஸ்கோப் 2’ என்று அது எளிதாக அளவிடுகிறது,” என்றது.

ஒரு நிறுவனம் தனது பயன்பாட்டுப் பொருள்கள் அல்லது போக்குவரத்து வாகனங்களில் இருந்து நேரடியாக கரிமத்தை வெளியேற்றுவது ‘ஸ்கோப் 1’ எனக் கருதப்படுகிறது.

அதேநேரம், மின்சாரம் அல்லது மின்சார உற்பத்தி நிறுவனங்களின் வெப்பமயம் போன்றவை வெளிப்படுத்தும் கரிமம் ‘ஸ்கோப் 2’ என்று குறிப்பிடப்படுகிறது.

அரசாங்கத் தரவுத்தளங்களையும் தனியார் துறைத் தீர்வுகளையும் ஜிபிரிண்ட் தளம் ஒருங்கிணைக்கிறது.

அவ்வாறு செய்வதன் மூலம் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தங்களது அடிப்படை கரிம வெளியேற்றத்தை எளிதாகக் கணக்கிட முடியும்.

அத்தகைய அடிப்படை வெளியேற்றங்கள் குறித்த தங்களது தகவல்களையும் பருவநிலை அபாய மேலாண்மை, பசுமைக் கொள்முதல், அடிப்படைய இஎஸ்ஜி தரவுகளின் உருவாக்கம் போன்றவற்றையும் நிறுவனங்கள் மதிப்பிட அந்த மின்னிலக்கத்தளம் அனுமதிக்கும்.

குறிப்புச் சொற்கள்