சீன மொழி நாளிதழுக்குப் புதிய ஆசிரியர்

சீன மொழி நாளிதழுக்குப் புதிய ஆசிரியர்

1 mins read
e13b7cd4-01e2-43dd-8078-52776f74de38
லியான்ஹ சாவ்பாவின் இணை ஆசிரியர் ஆங் யிடிங், 45. - படம்: எஸ்பிஎச் மீடியா

சிங்கப்பூரின் சீன மொழி நாளிதழான லியான்ஹ சாவ்பாவ் ஆசிரியராக 14 ஆண்டுகள் சேவையாற்றி, இவ்வாண்டு மே மாதம் ஓய்வுபெறவிருக்கிறார் 63 வயது திரு கோ சின் டெக்.

2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்து சாவ்பாவ் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார் திரு கோ. அவரது தலைமைத்துவத்தின்கீழ், ஊடகத் துறை முக்கிய மாற்றங்களைக் கண்டது.

பதவி விலகிய பிறகு லியான்ஹ சாவ்பாவில் மூத்த செய்திப்பிரிவு ஆலோசகர் பதவியை வகிப்பார் திரு கோ.

அவருக்குப்பின் சாவ்பாவ் நாளிதழின் புதிய ஆசிரியராக வரும் மே 5ஆம் தேதிமுதல் பொறுப்பேற்க இருக்கிறார் அதன் இப்போதைய இணை ஆசிரியர் ஆங் யிடிங், 45.

திருவாட்டி ஆங், 45, செய்தித்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர்.

மாலை, காலை நாளிதழ்கள், தொலைக்காட்சி, அச்சு ஊடகம், மின்னிலக்கத் தளங்கள் எனப் பலவற்றில் அவர் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சில் (எஸ்பிஎச்) கல்விமானாக இருந்த திருவாட்டி ஆங், ‘யு’ ஒளிவழியில் தமது பணியைத் தொடங்கினார். அதன்பிறகு, அவர் ‘லியான்ஹ வான்பாவ்’, ‘மை பேப்பர்’, ‘லியான்ஹ சாவ்பாவ்’ இதழ்களில் தமது பணியைத் தொடர்ந்தார். பல்வேறு தளங்களில் உள்ளடக்கத் தயாரிப்பில் அனுபவமிக்கவர் அவர்.

சாவ்பாவின் மின்னிலக்க உருமாற்றத்தை முன்னெடுத்துச் சென்றதில் முக்கியப் பங்கு வகித்த பெருமையும் அவரைச் சேரும்.  

குறிப்புச் சொற்கள்