தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயில் சேவைத் தடங்கல்களை நிர்வகிப்பதற்கான புதிய அம்சங்கள் சோதிக்கப்பட்டன

2 mins read
4cf54a0c-7417-4ef6-be30-fe85324ac40f
ஜூரோங் கிழக்கு எம்ஆர்டி நிலையத்தில் பாவனை ரயில் தடங்கலின்போது பயன்படுத்தப்படும் எளிதில் பார்வைக்குத் தென்படும் பெரிய மின்னிலக்க அறிவிப்புப் பலகைகள். - படம்: எஸ்எம்ஆர்டி

ரயில் சேவைத் தடங்கல்களின்போது பயணிகள் கூட்டத்தை நிர்வகிக்கும் பொருட்டு, செப்டம்பர் மாதத்திலிருந்து ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத்தில், பயணிகள் செல்லவிருக்கும் வழியைத் தெரிவிக்கும் அறிவிப்புப் பலகைகள் சோதிக்கப்படுகின்றன.

இவை படிப்படியாக எஸ்எம்ஆர்டியால் இயக்கப்படும் பிற முக்கிய சந்திப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு வழித்தடங்களில் மிகவும் பரபரப்பான சந்திப்பு நிலையமான ஜூரோங் ஈஸ்ட் நிலையம், ரயில் சேவை இடையூறுகளைச் சமாளிக்க மேம்பட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக எஸ்எம்ஆர்டி, செப்டம்பர் 10ஆம் தேதி ஒரு பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

இவற்றில் நிலையத்தில் அதிக ஊழியர்களைப் பணியமர்த்துதல், சிறிய உயர்த்தப்பட்ட தளங்களில் ஊழியர்களை நிறுத்துதல், அவர்களுக்கு பயணிகள் தெளிவாகப் பார்க்கக்கூடிய ஆடைகளைத் தெரிவு செய்தல், விளக்குக் குச்சிகள், விசில்கள், கையடக்கக் குரல் பெருக்கிகள் ஆகியவற்றுடன் பதிவுசெய்யப்பட்ட அறிவிப்புகளை ஒளிபரப்பக்கூடிய சிறிய ஒலிப்பெருக்கிகள் போன்ற மேம்பட்ட கூட்ட மேலாண்மை நடவடிக்கைகள் அடங்கும்.

இத்தகைய மேம்பாடுகள், நிலையத்தில் தெளிவான தகவல்தொடர்புக்கு உதவும். மேலும் பயணிகள் நிலைய ஊழியர்களைத் தெளிவாகப் பார்ப்பதை உறுதி செய்யும் என்று எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.

கூடுதலாக, சில பேருந்து நிறுத்தங்களில் உள்ள கூம்புகளைத் தொலைவிலிருந்து இயக்கலாம். இதனால் பேருந்து ஓட்டுநர்களுக்கு இலவச இணைப்புப் பேருந்து சேவைகள் செயல்படுத்தப்படுவது குறித்து உடனடியாகத் தெரிவிக்க முடியும்.

தெளிவான திசைகளைக் காண்பிக்கும், நிகழ்நேர சேவை புதுப்பிப்புகளை வழங்கும் மின்னிலக்க வழிகாட்டல் அடையாளங்கள் பிற மேம்பாடுகளில் அடங்கும்.

பாதிக்கப்பட்ட நிலையங்களுக்கு இடையே இலவச வழக்கமான மற்றும் இணைப்புப் பேருந்து சேவைகளுக்காக நியமிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களுக்குப் பயணிகளைச் சிறப்பாக வழிநடத்த, முழு அளவிலான அறிவிப்புப் பதாகைகள், தூண்களில் ஒட்டப்பட்ட பெரிய அறிவிப்புப் பலகைகளும் பயன்படுத்தப்படும்.

வரவிருக்கும் ஜூரோங் வட்டார பாதைக்கான ஒருங்கிணைப்புப் பணிகளுக்காக வைக்கப்படும் கட்டுமான சுவர்களால் தடுக்கப்பட்ட பகுதிகளில் இந்த மேம்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்