ஐரிஸ் கோவின் பிணைக்கு உத்தரவாதமளிக்கும் புதியவர்

1 mins read
bf6c0ded-e2ce-4e38-9e8b-6905b681d4f9
பிப்ரவரி 21ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வந்த ஐரிஸ் கோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தடுப்பூசிக்கு எதிரான ‘ஹீலிங் த டிவைட்’ என்ற அமைப்பின் நிறுவனரான ஐரிஸ் கோவுக்கு புதியவர் ஒருவர் அவரது பிணைக்கு உத்தரவாதமளிக்க முன்வந்துள்ளார்.

முன்னதாக அவரது கணவர் உத்தரவாதமளித்திருந்தார். ஆனால் அவர் மீதே ஏமாற்றுக் குற்றச்சாட்டு இருப்பதால் அவர் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஒருவரது பிணைக்கு உத்தரவாதமளிக்கும் நபர் சிங்கப்பூர் குடிமகனாக அல்லது நிரந்தரவாசியாக, குறைந்தது 21 வயதுடன், திவால் அல்லது குற்றவியல் குற்றச்சாட்டு இல்லாதவராக இருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் நீதிமன்றத்தின் இணையப் பக்கம் தெரிவிக்கிறது.

பிப்ரவரி 21ஆம் தேதி கோவின் பிணைத் தொகை $30,000 என நீதிமன்றம் நிர்ணயித்தது. அதற்கு திருவாட்டி இத்தல் வோங் என்பவர் உத்தரவாதமளித்துள்ளார்.

ஐரிஸ் கோ, 49, மருத்துவராகச் செயல்பட இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட ஜிப்சன் குவா, 36, சம்பவத்தின்போது மருந்தக உதவியாளராக செயல்பட்ட தாமஸ் சுவா செங் சூன், 43 ஆகியோர் நோயாளிகளுக்கு சினோஃபார்ம் தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதார மேம்பாட்டுக் கழகத்திடம் பொய் கூறியதாக குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால் நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை.

சிங்கப்பூரில் தனியார் மருந்தகங்களில் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக சினோபார்ம் தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டது.

இவர்கள் மீதான வழக்கு மார்ச் 4ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

மற்றொரு நிலவரத்தில் பிப்ரவரி 7ஆம் தேதி கோவின் கணவர் 51 வயது இங் மீது $61,000 தொடர்புடைய 12 ஏமாற்றுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

குறிப்புச் சொற்கள்