மின்னிலக்கச் சொத்துகள் குறித்த புதிய வழிகாட்டி நெறிமுறைகள்: கவனிப்பாளர்கள் கருத்து

1 mins read
1ac55f25-65d2-40ef-b8f6-a8bd361da46c
மின்னிலக்கச் சொத்துகளுடைய வாடிக்கையாளர்களை வங்கிகள் கையாளும்போது சிறந்த வழிகாட்டி நெறிமுறைகளை சிங்கப்பூர் நாணய ஆணையம் கடந்த வாரம் பரிந்துரை செய்திருந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்னிலக்கச் சொத்துகளுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்களை வங்கிகள் கையாளும்போது கருத்தில் கொள்ளவேண்டிய புதிய வழிகாட்டி நெறிமுறைகள் சிங்கப்பூரின் மின்பணக் கட்டமைப்பை வலுவாக்குவதற்கான சிறு படிகள் என்று கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் மின்பணம் போன்ற மின்னிலக்கச் சொத்துகளுக்குப் பயன்பாட்டுத் தரங்களைப் பரிந்துரைக்கும் வெள்ளை அறிக்கையை சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிட்ட நிலையில், கவனிப்பாளர்கள் அதனை வரவேற்றுள்ளனர்.

மின்பணம் தொடர்பில் நல்ல பணத்தைக் கள்ளப் பணமாக்குதல், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல், தடைகள் தொடர்பான அபாயங்கள் ஆகியவற்றைக் கையாளும்போது நிதிக் கழகங்கள் கருத்தில்கொள்ளும் அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.

இருப்பினும் மின்னிலக்கச் சொத்துத் துறைக்கான வழிகாட்டுதலை இவ்வாறு குறிப்பிடத்தக்க வகையில் செய்வது குறித்துப் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நல்ல பணத்தைக் கள்ளப் பணமாக்குதல், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல், தடைகள் தொடர்பில் ஏற்படக்கூடிய அபாயங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மின்னிலக்கச் சொத்து நிறுவனங்களை வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களாகத் தேர்ந்தெடுக்க நேரலாம். ஆனால் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிப் பரிவர்த்தனைச் சேவைகளை நிறுவனங்களால் பயன்படுத்த இயலாது. இதனால் அவற்றின் செயல்பாடுகளும் பாதிக்கப்படும்.

அத்தகைய நிறுவனங்களை வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களாகக் கருதினாலும் தேவையான தகவல்களைச் சரிபார்க்க 9 முதல் 12 மாதங்களாகும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்