தேசிய பூங்காக் கழகத்துக்குப் புதிய தலைவர்

தேசிய பூங்காக் கழகத்துக்குப் புதிய தலைவர்

1 mins read
4f5caae9-79e3-439f-894f-3df3b1fc6638
தேசிய பூங்காக் கழகத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் லோ கம் இயான். - கோப்புப் படம்: போக்குவரத்து அமைச்சு
multi-img1 of 2

வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் தேசிய பூங்காக் கழகத்துக்குப் புதிய தலைவர் பொறுப்பு வகிப்பார்.

அப்பொறுப்பில் கிட்டத்தட்ட மூவாண்டுகளாக இருந்த திரு லோ கம் இயான் பதவி விலகுகிறார். அவருக்குப் பதிலாக திரு சியூ ஹோக் யோங் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.

தேசிய பூங்காக் கழகமும் தேசிய வளர்ச்சி அமைச்சும் கூட்டு செய்தி அறிக்கை மூலம் வியாழக்கிழமை (ஜூலை 30) இத்தகவல்களை வெளியிட்டன.

திரு லோ, 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து தேசிய பூங்காக் கழகத் தலைவராகப் பொறுப்பு வகித்துவந்துள்ளார். விலங்கு மருத்துவ மன்றத்தை அமைப்பது உள்ளிட்ட பல முக்கியத் திட்டங்களை அவர் செயல்படுத்தியிருக்கிறார்.

அவரிடமிருந்து பொறுப்பை ஏற்கவுள்ள திரு சியூ, 30 ஆண்டுகளுக்கும் மேலான அரசாங்கத் துறை அனுபவம் உள்ளவராவார். அவர் பல்வேறு அமைச்சுகளில் தலைமைத்துவப் பொறுப்புகளை வகித்திருப்பதாக தேசிய பூங்காக் கழகமும் தேசிய வளர்ச்சி அமைச்சும் தெரிவித்தன.

தேசிய வளர்ச்சி அமைச்சின் இரண்டாம் நிரந்தரச் செயலாளராகப் பொறுப்பு வகித்த திரு சுயூ அதற்கு முன்பு நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை நிர்வாகியாகப் பதவி வகித்தார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்தேசிய பூங்காக் கழகம்தலைவர்பதவிபதவி மாற்றம்