பிரதமர் தலைமையில் புதிய தேசியச் செயற்கை நுண்ணறிவு மன்றம்

பிரதமர் தலைமையில் புதிய தேசியச் செயற்கை நுண்ணறிவு மன்றம்

1 mins read
d39f410c-f326-4c81-8006-a0d60c73199c
பிரதமர் வோங் தலைமையில் புதிய தேசிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மன்றம் அமையவுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் தேசியச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயல்திட்டத்தை வழிகாட்டி இயக்க தேசிய செயற்கை நுண்ணறிவு மன்றம் அமைய உள்ளது.

இந்த மன்றத்துக்கு திரு வோங் தலைமை தாங்குவார்.

இந்த மன்றம் தேசிய ‘ஏஐ’ இலக்குகளை முன்னெடுக்கும். பொருத்தமான தொழில்துறை, வளர்ச்சி திறனும் கொண்ட துறைகளில் இந்த இலக்குகளை மன்றம் செயல்படுத்தும்.

புத்தாக்கமிக்க தாக்கத்தை ஏற்படுத்தும் ‘ஏஐ’ தீர்வுகளின் மேம்பாடு, பரிசோதனை, பயன்பாடு, விளைவுகளை அளவிடுதல் ஆகியவற்றைத் துரிதப்படுத்தவும் புதிய மன்றம் வளங்களை வழங்கும்.

இப்புதிய தேசிய ‘ஏஐ’ மன்றத்தில் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு, சுகாதார அமைச்சர் ஓங் யி காங், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, மனிதவள அமைச்சரும் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டான் சீ லெங், தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட், போக்குவரத்துத் தற்காலிக அமைச்சரும் நிதிக்கான மூத்த துணை அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ் ஆகியோர் இடம்பெறுவர். மேலும், இம்மன்றத்துக்காக, தனியார் ‘ஏஐ’ நிபுணத்துவத் திறன்களும் பயன்படுத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுபட்ஜெட் 2026Budget 2026லாரன்ஸ் வோங்ஏஐவரவுசெலவுத் திட்டம் 2026அமைப்பு