ஒன் ராஃபிள்ஸ் பிளேசில் அமையவிருக்கும் புதிய கேளிக்கை நிலையம்

ஒன் ராஃபிள்ஸ் பிளேசில் அமையவிருக்கும் புதிய கேளிக்கை நிலையம்

1 mins read
ac6c951b-1898-47b6-a7e5-c863cc780c3f
கொவிட்-19 நோய்ப் பரவல் காலத்திற்குப் பிறகு திறக்கப்படும் மிகப் பெரிய இரவு நேரக் கேளிக்கை நிலையமாக இது இருக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒன் ராஃபிள்ஸ் பிளேஸ் கடைத்தொகுதியில் டிசம்பர் மாதம் ஒரு புதிய இரவுநேரக் கேளிக்கை நிலையம் உதயமாகிறது. வருகையாளர்கள் அங்கிருந்து இரவு நேரத்தில் சிங்கப்பூரின் அழகைக் கண்டு ரசிக்கலாம்.

கொவிட்-19 கொள்ளைநோயால் வருமானம் இழந்த பொழுதுபோக்குத் துறைக்கு இந்தப் புதிய நிலையத்தின் உதயம், புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய நிலையம், டிசம்பர் மாதம் 12ஆம் தேதி திறக்கப்படும். ஒன் ராஃபிள்ஸ் பிளேசின் 61, 62ஆம் தளங்களில் இது அமைந்திருக்கும்.

உணவகம், ஆக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் மதுபானக்கூடம் போன்றவை அதில் இடம்பெற்றிருக்கும்.

கொவிட்-19 கொள்ளைநோய்க் காலத்திற்குப் பிறகு திறக்கப்படும் ஆகப் பெரிய இரவுநேரக் கேளிக்கை நிலையமாக இது இருக்கும்.

‘ஓயூஇ ரெஸ்டாரண்ட்ஸ்’ நிறுவனம், கிட்டத்தட்ட $13 மில்லியன் செலவில் இந்த நிலையத்தை அமைத்துள்ளது. 10,300 சதுர அடி பரப்பளவில் இது அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்