சுகாதார அறிவியல் ஆணையத்திற்குக் கூடுதல் அதிகாரம் கொடுக்கும் புதிய சட்டம்

சுகாதார அறிவியல் ஆணையத்திற்குக் கூடுதல் அதிகாரம் கொடுக்கும் புதிய சட்டம்

2 mins read
5750a681-edac-4f32-b571-3ca1b19ddb86
நாடாளுமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்ட சட்டத்தின்கீழ் சுகாதார அறிவியல் ஆணையத்துக்குக் கூடுதல் ஒழுங்குமுறை, விசாரணை அதிகாரங்கள் வழங்கப்படக்கூடும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சுகாதாரப் பராமரிப்பு நடைமுறைகளை மாற்றவும் ஒருங்கிணைக்கவும் நாடாளுமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்ட சட்டத்தின்கீழ் சுகாதார அறிவியல் ஆணையத்துக்குக் கூடுதல் ஒழுங்குமுறை, விசாரணை அதிகாரங்கள் வழங்கப்படக்கூடும்.

நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சுகாதார அறிவியல் ஆணையம் (திருத்தம்), பிற விவகாரங்கள் மசோதாவில், உயிரியல் காரணிகள், நச்சுகள் சட்டம், மனித உயிரி மருத்துவ ஆராய்ச்சி சட்டம் ஆகியவற்றை நிர்வகிப்பதற்கும் அமல்படுத்துவதற்குமான அதிகாரம், சுகாதார அமைச்சின் சுகாதாரத் தலைமை இயக்குநரிடமிருந்து சுகாதார அறிவியல் ஆணையத்தின் தலைமை நிர்வாகிக்கு மாற்றப்படும்.

புதிய மசோதா நிறைவேற்றப்பட்டால் மனித உயிரி மருத்துவ ஆராய்ச்சிகளை நடத்துவது, உயிரியல் காரணிகளைக் கொண்டிருப்பது, உயிரியல் காரணிகளைப் பயன்படுத்துவதற்கும் இறக்குமதி செய்து ஒழுங்குபடுத்துவதற்குமான பொறுப்பு சுகாதார அறிவியல் ஆணையத் தலைமை நிர்வகிக்கும் அவரது அமைப்புக்கும் வழங்கப்படும்.

தொற்றுநோய் சட்டம், மெடி‌ஷீல்ட் லைஃப் திட்டச் சட்டம், கருச்சிதைவுச் சட்டம் ஆகிய பிற ஒன்பது சட்டங்களை நிர்வகிப்பதற்கான அதிகாரமும் ஆணையத்துக்கு மாற்றப்படும்.

சுகாதார அறிவியல் ஆணையம் புதிய பொறுப்புகளைச் சரிவர மேற்கொள்வதை உறுதிசெய்ய, சுகாதார அமைச்சின் வசம் உள்ள பொருத்தமான ஊழியர்கள், சொத்துகள் ஆகியவையும் ஆணையத்திற்கு மாற்றிவிடப்படும்.

ஒழுங்குமுறை இணக்கம், ஒழுங்குமுறை மாற்றம், கண்காணிப்பு, அமலாக்கம் ஆகிய பிரிவுகள் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் சில முக்கியத் துறைகளும் ஆணையத்திற்கு மாற்றப்படும்.

அதன் மூலம், நோயாளிகளின் பாதுகாப்பையும் பொதுநலனையும் உறுதிசெய்யும் வகையில் சுகாதாரச் சேவைகளுக்கான உரிமங்களைக் கண்காணித்து நிர்வகிக்கும் ஒழுங்குமுறைப் பணிகளை ஆணையம் ஏற்றுக்கொள்ளும்.

கடுமையான நோய்களுக்கான மருத்துவமனைகள், சமூக மருத்துவமனைகள், ரத்த வங்கிகள், மருத்துவப் போக்குவரத்துச் சேவைகளை வழங்குவோர், சிறுநீரகச் சுத்திகரிப்பு மையங்கள், முதியோர் பராமரிப்பு இல்லங்கள் ஆகியவை உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்
சுகாதார அறிவியல் ஆணையம்புதிய சட்டம்சுகாதார அமைச்சு