சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி பாசிர் ரிஸ் - சாங்கி குழுத்தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும் பொங்கோல் குழுத்தொகுதியில் கூட்டணி போட்டியிடுமா என்பதை உறுதிப்படுத்தவில்லை.
புதிய பாசிர் ரிஸ்- சாங்கி குழுத்தொகுதியின் கீழ் உள்ள லொங்கொக் மரியாம் பகுதியில் (ஏப்ரல் 13) சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் தரைவீட்டில் உள்ள குடியிருப்பாளர்களைச் சந்தித்து ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் பேசினர்.
தற்போது ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் கீழ் வரும் லெங்கோக் மரியாம் வட்டாரம் தேர்தல் தொகுதி எல்லை மறுவரையறையில் புதிய பாசிர் ரிஸ்- சாங்கி குழுத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி 2006ஆம் ஆண்டிலிருந்து பாசிர் ரிஸ்- பொங்கோல் குழுத்தொகுதியைக் கைப்பற்ற போராடிவருகிறது.
பொங்கோல் குழுத்தொகுதியில் கூட்டணி போட்டியிடுமா என்பதை உறுதிப்படுத்தவில்லை. அதுகுறித்து இன்னும் யோசிப்பதாகக் அது சொன்னது.
பாட்டாளிக் கட்சியும் அங்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதால் அடுத்த ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்கப்படும் என்று கூட்டணி தெரிவித்தது.
மும்முனை போட்டியைத் தவிர்ப்பதாகவும் கூட்டணி குறிப்பிட்டது.

