மேயர் புளூ மற்றும் நோர்வூட் கிராண்ட் ஆகிய இரண்டு முக்கிய குடியிருப்புத் திட்டங்களில் அதிக வீடுகள் விற்பனையானதால், அக்டோபரில் புதிய தனியார் வீட்டு விற்பனை அதிகரித்தது.
அக்டோபரில் விற்பனை செய்யப்பட்ட எக்சகியூடிவ் கூட்டுரிமை வீடுகள் (இசி) தவிர்த்து 738 தனியார் வீடுகள் விற்கப்பட்டதாகவும் அதே மாதம் 534 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டதாகவும் நவம்பர் 15ஆம் தேதி வெளியிடப்பட்ட நகர்ப்புற மறுசீரமைப்பு ஆணையத் தரவுகள் தெரிவித்தன.
ஆகக் கடைசி விற்பனைத் தரவு, முந்தைய மாதம் விற்கப்பட்ட 401 வீடுகளைக் காட்டிலும் 84% அதிகமாகும். மேலும் முந்தைய ஆண்டில் விற்கப்பட்ட 204 வீடுகளை விட மூன்று மடங்கு அதிகம், அதாவது 261.8% உயர்வு.
வட்டார வாரியாக, மொத்த பரிவர்த்தனைகளில் பெரும்பான்மையானவை அல்லது 62.1% மத்திய புறநகர்ப் பகுதியில் இருந்து வந்துள்ளது. அதைத் தொடர்ந்து மத்திய வட்டாரத்தின் மற்ற பகுதிகளில் 33.6% பரிவர்த்தனைகளும் மத்திய வட்டாரத்திலிருந்து 4.3% பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
எக்சகியூடிவ் கூட்டுரிமை வீடுகளைச் சேர்த்து, அக்டோபரில் மொத்தம் 766 புதிய சொத்து மேம்பாட்டாளர் வீட்டுப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றன. இது முந்தைய மாதத்தின் 433 வீடுகளை விட 76.9% அதிகம். 2023 அக்டோபரில் விற்கப்பட்ட 225 வீடுகளை விட 240.4% அதிகம்.
இந்த ஆண்டு இறுதி விடுமுறைக்கு முன்னதாக பல குடியிருப்புத் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளதால், அக்டோபர் மாத லாபம், 2024ஆம் ஆண்டில் புதிய வீட்டு விற்பனையில் அதிகபட்சமாக இருக்கும் என்றும் நவம்பர் மாத ஆக்கபூர்வமான தரவுகளாக அவை நீடிக்கும் என்றும் சந்தைப் பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

