இரைப்பைப் புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சையில் புதிய முன்னேற்றம்

இரைப்பைப் புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சையில் புதிய முன்னேற்றம்

1 mins read
fa7b67bb-a816-4683-9d55-242c314ce80d
புதிய சிகிச்சை முறையால் புற்றுநோய் உயிரணுக்கள் மற்ற இடங்களுக்குப் பரவாமல் தடுக்கப்படும் என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இரைப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேம்பட்ட சிகிச்சை முறை ஒன்று உதவவுள்ளது.

கீமோதெரபிக்குத் தேவையான மருந்துகளை வயிற்றுப் பகுதிக்குள் நோயெதிர்ப்புச் சிகிச்சையுடன் இணைந்து ரத்த ஓட்டம் வழியாகச் செலுத்த தெளிப்பான் பயன்படுத்தப்படுகிறது.

அவ்வாறு செய்வதன் மூலம் புற்றுநோய் உயிரணுக்கள் மற்ற இடங்களுக்குப் பரவாமல் தடுக்கப்படும் என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தச் சிகிச்சை முறை இரைப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பெரும் அவதியில் இருந்து காப்பாற்றும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் இந்தச் சிகிச்சைமுறையால் இரைப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரிலும் பெல்ஜியத்திலும் இந்தச் சிகிச்சைமுறை 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை சோதிக்கப்பட்டது. அதில் 18 பேர் கலந்துகொண்டனர்.

உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு மூன்றாவது முக்கியக் காரணமாக உள்ளது இரைப்பைப் புற்றுநோய்.

ஆண்டுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இரைப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள், 770,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கின்றனர்.

சிங்கப்பூரில் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 300 பேர் இரைப்பைப் புற்றுநோயால் இறக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்