புது வசதிகளுடன் புதுப்பொலிவு பெறும் தோ பாயோ வட்டாரம்

புது வசதிகளுடன் புதுப்பொலிவு பெறும் தோ பாயோ வட்டாரம்

1 mins read
1ca48530-74bb-4dc6-9ca7-ceb74ff579b6
படம்: MKPL ARCHITECTS -

தோ பாயோ வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் விளையாட்டு மையம், பலதுறை மருந்தகம், பொது நூலகம், நகரப் பூங்கா ஆகிய வசதிகள் இருக்கும். இந்த ஒருங்கிணைந்த வளாகம் 2030ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று சிங்கப்பூர் விளையாட்டு மன்றம் தெரிவித்தது.

தோ பாயோ லோரோங் ஆறுக்கும் தீவு விரைவுச் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் 12 ஹெட்டர் பரப்பளவில் இந்த வளாகம் அமைக்கப்படும்.

புதிய விளையாட்டு மையத்தில் நீச்சல் குளம், உள்ளரங்குகள், காற்பந்து திடல், உடற்பயிற்சிக் கூடம் போன்ற வசதிகள் இருக்கும். அதோடு சில விளையாட்டுகளுக்கான தேசிய பயிற்சி நிலையங்களும் இந்த மையத்தில் அமைக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்