எதிர்கால சாங்கி விமான நிலைய முனையம் 5ல் உள்ள பயணிகள் விமான நிலையத்தின் புதிய நிலத்தடி இணைப்பு வழியாக நான்கு நிமிடங்களில் முனையம் 2ஐ அடையக்கூடும்.
முனையங்கள் 1, 2 , 3 க்கு சேவை செய்யும் தற்போதைய தானியங்கி இணைப்பு ரயிலைப் போன்ற நிலத்தடி ரயில் நான்கு முதல் எட்டு நிமிடங்களுக்குள் இயங்கும் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் டிசம்பர் 30ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் ஊடகச் சந்திப்பின்போது தெரிவித்துள்ளது.
இரண்டு பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில், பொருள்களுடன் சுமார் 96 பயணிகள் அல்லது ஒரு பெட்டிக்கு 48 பேர்வரை பயணம் செய்ய முடியும். விமான நிலைய நடத்துநரின் எதிர்கால ஐந்து ரயில்களில் இரண்டு ரயில்கள் எந்த நேரத்திலும் இயக்கப்படும். இது குறித்து சாங்கி விமான நிலையக் குழுமம் இன்னும் முடிவு செய்யவில்லை.
முனையம் 5க்கும் முனையம் 2க்கும் இடையேயான சுமார் 1.7 கி.மீ நீளமுள்ள மூன்று நிலத்தடிச் சுரங்கப்பாதைகள் அக்டோபர் 2024ல் நிறைவடைந்தன. இரண்டு சுரங்கப்பாதைகள் மக்களைக் கொண்டு செல்வதற்கானவை. மூன்றாவது சுரங்கப்பாதைப் பொருள்களுக்கானது.
பொருள்களுக்கான சுரங்கப்பாதை முனையம் 5க்கும் முனையம் 2க்கும் இடையில் ஒரு மணி நேரத்திற்கு 3,000 பயணப் பெட்டிகள் வரை இடம் மாற்றுவதற்கு உதவும்.
இதற்கு நேர்மாறாக, சாங்கி விமான நிலைய இணையத்தளத்தின்படி, முனையங்கள் 1, 2, 3ஐ இணைக்கும் பயணப்பெட்டிகள் முறை ஒரு மணி நேரத்திற்கு 2,700 க்கும் மேற்பட்ட பயணப்பெட்டிகளைக் கையாள முடியும்.
பிரதமர் லாரன்ஸ் வோங் மாபெரும் முனையத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகு, மே 2025ல் முனையம் 5ன் கட்டுமானப் பணிகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கின.
முனையத்திற்குள் உள்ள மக்களை நகர்த்தும் இரண்டு தானியங்கிச் சுரங்கப்பாதைகள் போன்ற கட்டுமானப் பணிகளும் முனையம் 5ல் மேற்கொள்ளப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
முனையம் 5க்குள் உள்ள இரண்டு மக்களை நகர்த்தும் அமைப்புகள், புறப்படும் பயணிகளை அவர்களின் விமான வாயில்களுடனும், சிங்கப்பூருக்கு வரும் பயணிகளை இரண்டு வருகை குடிகுழைவு மண்டபங்களுடனும் இணைக்கும்.

